விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ், அதன்பிறகு இவர் ரம்யா பாண்டியன், பவித்ரா, தர்ஷாவிடம் செய்யும் வம்புகளை ரசிகர்கள் அதிகம் ரசித்தனர். குக் வித் கோமாளி மூன்றாவது சீசனில் புகழ், தன்னுடைய காதலையும், காதலியான பென்சியையும் எல்லோருக்கும் அறிமுகப்படுத்தினார்.
பென்சி ரியா கோயம்புத்தூரை சேர்ந்தவர். ஒரு கலைநிகழ்ச்சியின் போது இருவரும் சந்தித்து, பின்பு நட்பு காதலாக மாறியது. சமீபத்தில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி மாலை 6 மணிக்கு இவர்களின் திருமணம் நடைபெற உள்ளதாக செய்தியும் வெளியானது.
ஆனால் தற்போது திடீரென்று காதல் மனைவியை கரம் பிடித்திருக்கிறார் புகழ். இவர்களது திருமண புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவுகிறது. இந்த திருமணத்தில் இருவீட்டார் மட்டுமே கலந்து கொண்டு மிக எளிமையான முறையில் நடைபெற்றிருக்கிறது.
காதல் மனைவியை கரம் பிடித்த புகழ்

இந்தப் புகைப்படங்களில் புகழ் தனது காதல் மனைவிக்கு நெற்றியில் குங்குமம் இடுவது போன்றும், இருவரும் மாலை மாற்றிக் கொள்வது போன்றும் திருமணக்கோலத்தில் மணமக்களின் முகம் சந்தோஷத்தில் பூரிப்படைந்துள்ளது. புதுமணத் தம்பதியர்களான புகழ்-பென்சிக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை சோஷியல் மீடியாவில் தெரிவிக்கின்றனர்.
வெள்ளித்திரையிலும் தளபதி விஜயின் பீஸ்ட், தல அஜித்தின் வலிமை, சமீபத்தில் அருண் விஜய்யின் நடிப்பில் வெளியான யானை போன்ற படங்களில் சிறு ரோலில் நடித்து பெரிய திரையில் தலை காட்டினார் புகழ்.
காதல் மனைவிக்கு நெற்றியில் குங்குமம் இடும் புகழ்

புகழ் தற்போது ஏஆர்முருகதாஸ் இயக்கும் ஆகஸ்ட் 16 1947, மிர்ச்சி சிவாவின் காசே தான் கடவுளடா, சந்தானத்தின் ஏனஜ்ட் கண்ணாயிரம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதியின் டிஎஸ்பி/ விருசன் உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார்.