குக் வித் கோமாளி – Chef of the Week பட்டத்தை வென்ற பூ நடிகை

விஜய் டிவியின் பிரபலமான நகைச்சுவை சமையல் நிகழ்ச்சியான “குக் வித் கோமாளி”யில் சென்ற வாரம் “Street food” ரவுண்ட் நடைபெற்ற நிலையில்
இந்த வாரம் Kids Special ரவுண்ட் நடந்தது. சமையல் மட்டுமல்லாமல், சிரிப்பு, கலகலப்பு மற்றும் குழந்தைகளின் ஆரவாரம் நிரம்பிய ஒரு கலகலப்பான நிகழ்வாக இருந்தது. இன்றைய மெயின் குக்கிங் நீதிபதிகள் குழந்தைகள் தான்.

Kids Round என்பதால் கோமாளிகள் அனைவரும் குழந்தைகள் விரும்பும் Cartoon Character-ல் வந்திருந்தார்கள். Cook- ம் குழந்தைகள் சந்தோஷப்படும் விதத்தில் வித்தியாசமான கெட்டப்பில் வந்திருந்தனர்.

Advantage Task சமையல் செய்வதற்கு குழந்தைகள் தங்களுக்கு பிடித்த Cartoon Character comali களை செலக்ட் செய்து ஜோடி சேர்த்தனர். இந்த டாஸ்கில் Miniature குக்கிங் செட் ஐ பயன்படுத்தி colourful Dosai, different Shape- இல் செய்வது தான் டாஸ்க்.

இந்த வார Advantage Task-ல் வெற்றி பெற்ற Top 2 போட்டியாளர்கள் – நந்தா குமார் மற்றும் உமைர். இரண்டு ஜோடிகளும் முக்கிய Cook-Off சுற்றில் Advantage சலுகை பெற்று மெயின் குக்கிங் ரவுண்டில் முன்னிலை பெற்றனர்.

மெயின் குக் டாஸ்க் – இன் சில விதிமுறைகள் குழந்தைகள் விரும்பும் வகையில், ஆரோக்கியமான உணவு தான் தயாரிக்க வேண்டும். மைதா மற்றும் வெள்ளை சர்க்கரை பயன்படுத்தக் கூடாது. டீப் ஃப்ரை செய்வது அனுமதி இல்லை.

செஃப் ஆப் தி வீக் முடிவுகள்

ஷபானா, லட்சுமி, மற்றும் நந்தகுமார் மூவரும் நான்காம் இடமும், ராஜூ – மூன்றாம் இடமும், உமைர் – இரண்டாம் இடமும், ப்ரியா – முதல் இடமும் பெற்றனர்.

10 நிமிட குறைபாட்டை சந்தித்தும், தன்னுடைய திறமையாலும், சமயோசித்ததாலும் ப்ரியா சிறந்த முறையில் சமையல் செய்து குழந்தைகளை கவர்ந்து CHEF OF THE WEEK பட்டத்தையும் வென்றார்.

LEADER BOARD இல் மூன்று வாரங்களுக்கு பிறகு, உமைர் தற்போது முதலிடத்தில் உள்ளார். இந்த வாரம், ராஜூ மற்றும் சுந்தரி அக்கா Danger Zone ல் உள்ளனர். அடுத்த வாரம் எலிமினேஷன் எபிசோட், ஆகவே எல்லோரும் பதற்றத்தில் உள்ளனர்.

அடுத்த வாரம் ஒருவரின் பயணம் முடிவடையும், அது யார் என்பதை இனி வரும் வாரங்களில் பார்க்கலாம்.