Cooku With Comali: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வார ஸ்பெஷல் ஆக “Dairy Round நடைபெற்றது. புதிய ஜட்ஜ் ஆக செஃப் தீனா களமிறங்கினார். இந்த வாரம் குக் அண்ட் கோமாளிகள் “லெட்டர் பாக்ஸ்” மூலம் ஜோடி சேர்ந்தனர்.
கோமாளிகள் தங்கள் பிடித்த குக் ஒருவருக்கு கடிதம் எழுதி ஜோடிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அட்வான்டேஜ் டாஸ்க் நடந்தது .
10 நிமிடங்களில் மாட்டிலிருந்து அதிக பாலை எடுத்தவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்கள்.அதில் நந்தா குமார் முதல் இடத்தையும், ஷபானா 2 ம் இடத்தையும், உமைர் மற்றும் ராஜூ 3 வது இடத்தையும் பெற்று அட்வான்டேஜ் டாஸ்க் சலுகையை வென்றனர்.
மெயின் குக் தொடங்கும் முன் புதிய வெப் சீரிஸ் “The Good Wife” பிரமோஷனுக்காக பிரியா மணி, ஆரி மற்றும் மேகா ராஜன் வந்தனர். அவர்களின் வருகை அனைவரிடையிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஹெட்ஃபோன் அணிந்து சமைக்க வேண்டிய சுவாரஸ்யமான ட்விஸ்ட் இந்த வார நிகழ்ச்சியில் கலகலப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து இந்த வார மெயின் குக்கிங் ல், செஃப் தீனா தேர்ந்தெடுத்த ஸிக்னேச்சர் இன்கிரிடியண்ட் ஒரு டிஷ்ஷில் சேர்க்கப்படுகிறது.
CHEF OF THE WEEK வெற்றியாளர்
நிகழ்ச்சியின் முடிவில் நந்தா குமார் CHEF OF THE WEEK பெற்று முதல் இடத்தை அடைந்தார். சென்ற வாரம் ராஜு அண்ட் சுந்தரி அக்கா Danger Zone ல் இருந்தனர். இவர்களில் ராஜு Danger Zone லிருந்து தப்பித்து அடுத்த லெவலுக்கு முன்னேறியுள்ளார்.
சந்தோஷமும், சோகமும் நிறைந்த அந்த தருணத்தில் குறைந்த மதிப்பெண் பெற்று சுந்தரி அக்கா எவிக்ஷன் எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்தியது.