CWC 6: முதல் நாளே சண்டைக்கு போன சௌந்தர்யா.. பஞ்சாயத்தை கூட்டப் போகும் சுனிதா

Cook with comali 6: குக் வித் கோமாளி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் ஒரு பக்கம் பரபரப்பாக சமைத்துக் கொண்டிருக்கும் போட்டியாளர்கள், இன்னொரு பக்கம் அவர்களின் பொறுமையை சோதிக்கும் அளவிற்கு நகைச்சுவையால் திணறடிக்கும் கோமாளிகள். இவர்களுக்கு நடுவே ஜட்ஜஸ்கள் படும் படாத பாடு, இதையெல்லாம் கண்டு ரசிப்பது மனதிற்குள் ஒரு பேரானந்தமாக இருக்கும்.

அதனாலேயே விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சி வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று ஆரம்பித்த சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்கள் யார் என்றால் ஷபானா, பிரியா ராமன், கஞ்சா கருப்பு, பிக் பாஸ் ராஜு, லட்சுமி ராமகிருஷ்ணன், தேனடை மதுமிதா, உமைர் இப்னு லத்தீப். இவர்களை ஆட்டிப்படைக்கும் கோமாளிகளாக வந்திருப்பது சுனிதா, ராமர், சரத், புகழ், சௌந்தர்யா, சஜின் குமார், பூவையார், டாலி மற்றும் குரைஷி ஆகியோர் கலந்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் ஜட்ஜ் ஆக தாமு, மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் செப் கவுசிக். மேலும் வழக்கம் போல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதமாக ரக்சன் வந்திருக்கிறார். இவர்களுக்கு நடுவே நேற்று தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் காரசாரமாக சௌந்தர்யாவின் சண்டை ஆரம்பமாகி இருக்கிறது. அதாவது சௌந்தர்யா நேற்று கஞ்சா கருப்புக்கு கோமாளியாக இருந்திருக்கிறார்.

அப்பொழுது கஞ்சா கருப்பு மற்றும் சௌந்தர்யாக்கு இடையே வாக்குவாதம் நடக்கும் பொழுது ஜட்ஜ் கௌஷிக் இங்கே என்ன நடக்குது, யார் கோமாளி, யார் குக் என்பதே தெரியவில்லை என்று சொல்லி இருக்கிறார். அதற்கு ஆத்திரப்பட்ட சவுந்தர்யா நான் நல்லா சமைப்பேன். என்னை இங்கே முதலில் கூப்பிட்டது போட்டியாளர்களில் ஒருவராக சமைப்பதற்கு தான்.

ஆனால் வந்த பிறகு என்னை அப்படியே ஏமாற்றிவிட்டு கோமாளியாக மாற்றி விட்டார்கள் என்று மொத்த கடுப்பையும் காட்டி இருக்கிறார். ஏற்கனவே சௌந்தர்யாவின் கேரக்டர் எப்படிப்பட்டது என்று நமக்கு பிக் பாஸ் மூலம் தெரியும். அந்த வகையில் அமைதியாக இருந்து பிரச்சனை பண்ணக்கூடிய சவுந்தர்யா அடுத்து ஆட்டோ பாமாக வெடிக்க போகிறார்.

அந்த வகையில் சௌந்தர்யாவின் நடவடிக்கைகளை பார்த்த மக்கள் அடுத்து சுனிதாவும் சௌந்தர்யாவும் மோத போகிறார்கள் என்று கமெண்ட் பண்ணி வருகிறார்கள். ஏனென்றால் சுனிதா பொருத்தவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சீனியர் ஆக இருக்கிறார்.

இவருக்கும் சௌந்தர்யாவுக்கும் அடுத்தடுத்து சண்டை ஆரம்பமாகி பெரிய பஞ்சாயத்து நடக்கப்போகிறது. இதை தெரிந்து கொண்டு தான் விஜய் டிவி இந்த மாதிரி பிளான் பண்ணி சௌந்தர்யாவை கோமாளியாக போட்டிருக்கிறது. இனி அடுத்து வரும் ஒவ்வொரு வாரமும் காரசாரமான சண்டைகளுடன் நிகழ்ச்சி நடக்கப் போகிறது.