ஜீவானந்தத்தின் வீக்னஸ் பாயிண்ட்டை குறி வைக்கும் குணசேகரன்.. தலைவன் கதறி அழும்போது குமுறி சிரித்த மருமகள்கள்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் பார்ப்பவர்களை அடிமையாக்கி விட்டது என்றே சொல்லலாம். ஜீவானந்தத்தின் தரமான செயலுக்குப் பிறகு  குணசேகரன் சுக்கு நூறாக நொறுங்கி விட்டார். என்ன செய்வது என்று விட்டத்தை பார்த்து யோசித்த நிலையில் ஆடிட்டர், உங்க வீட்டில் உள்ள பெண்கள் நினைத்தால் அந்த சொத்து மறுபடியும் உங்களிடம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்.

உடனே குணசேகரனும் வேற வழியே இல்லை என்று தெரிந்ததால் வீட்டில் இருக்கும் மருமகளிடம் தஞ்சம் அடைய முடிவு பண்ணி விட்டார். அதற்காக செண்டிமெண்டாக பேசி ஒவ்வொருவரையும் லாக் செய்து வருகிறார். அதற்காக சூப்பரான பெர்பார்மன்ஸை கொடுக்க தயாராகி விட்டார். குணசேகரன், கதிர் மற்றும் ஞானம் அனைவரும் வீட்டிற்கு வருகிறார்கள்.

அங்கே இவர்களுடைய நிலைமையை பார்த்து அனைவரும் பரிதாபப்படுகிறார்கள். ஈஸ்வரிக்கு கொஞ்சம் கண்ணீரை வந்து விட்டது கணவரின் இந்த நிலைமை பார்த்த பிறகு. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குணசேகரன் தந்திரமாக நரி மூளையை யூஸ் பண்ண ஆரம்பித்து விட்டார்.

அதற்காக வீட்டில் அனைவரும் முன்னாடியும் குணசேகரன் பாவமாக இருப்பது போல் புலம்பித் தவிக்கிறார். இவருடைய நடிப்பை பார்ப்பதற்கு நமக்கே கண்ணீர் வருகிறது என்றால், அந்த வீட்டில் இருக்கும் பெண்களும் இவரை நம்ப தான் செய்வார்கள். அந்த வகையில் ஒவ்வொருவரையும் குணசேகரன் தூண்டிவிடும் விதமாக பேசுகிறார்.

இதைக் கேட்ட நந்தினி, ஆதிரை கல்யாண விஷயத்தில் தான் நாங்கள் தோற்றுப் போய் விட்டோம். கண்டிப்பாக இதில் நாங்கள் போராடி ஜெயித்து விடுவோம் என்று கூறுகிறார். உடனே குணசேகரன் இதை தான் நான் எதிர்பார்க்கிறேன் உங்களிடம், என்று மனதிற்குள் ஆட்டம் போடவே ஆரம்பித்து விட்டார். குணசேகரன் நினைத்த பிளான் வெற்றிகரமாக நெருங்கி விட்டது.

இன்னும் அடுத்தபடியாக குணசேகரன் இரவு நேரத்தில் தூங்கும் போது அந்த துப்பாக்கி சத்தத்தின் அலறலால் கதறி கதறி அழுகிறார். இதைப் பார்த்து மருமகள்கள் குமுறி குமுறி மனதிற்குள் சிரித்துக் கொள்கிறார்கள். ஆனால் கண்டிப்பாக இதே மாதிரி நடித்து அந்த வீட்டில் இருக்கும் மருமகள்களை வைத்து ஜீவானந்தத்தின் வீக்னஸ் பாயிண்ட்டில் அடிக்க போகிறார். எது எப்படியோ குணசேகரன் கடைசியில் பெண்களிடம் தஞ்சம் அடைந்து விட்டார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →