Marumagal : சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் மருமகள். சத்யாவின் AC பிரச்சனை தான் அந்த வீட்டில் மிகப்பெரிய பிரச்சனையாகவே இருக்கிறது. இந்த சீரியல் தான் இல்லத்தரசிகளின் மத்தியில் கடுப்பை கிளப்பியுள்ளது.
பிரபு, கார்த்தி, ஆதிரை மூவரும் ஏசியை வைத்துக்கொண்டு வெளியில் நின்று கொண்டிருக்கின்றனர். உள்ளே இருந்து சத்யா வெளியில் வந்து, என்ன ஆதிரை ஏசி மெக்கானிக் அப்போது வருவான் இப்போது வருவான் என்று கதை சொல்லிட்டு இருக்கிறீங்க என்று சத்யா கேட்கிறாள்.
நாங்க யாருமே அந்த மாதிரி நினைக்கல சத்யா என்று ஆதிரை கூறுகிறாள். அப்படி என்றால் ஏசி மெக்கானிக் எப்ப தான் வருவான் என்று சத்யா கேட்கிறாள். சாமி அண்ணன் இப்போது கூட்டிட்டு வந்துடுவார் என்கிறாள் ஆதிரை.
ஏசி மேக்கானிக் நிலை..
இதை என்னை நம்ப சொல்றீங்களா என்று கேட்கிறாள் சத்யா. உடனே பிரபு உண்மையை நீ நம்பி தான் ஆக வேண்டும் சத்யா என்கிறான். எது உண்மை அப்படி என்று கோபத்தை தான் பேசுகிறார். மெக்கானிக் எங்க வரவேண்டும் அப்போதான் அது உண்மையாகும் என்று ஏடாகூடமாக பேசுகிறார்கள்.
சாமி ஏசி மெக்கானிக் உடன் பைக்கில் வீட்டுக்கு வெளியில் நின்று கொண்டிருக்கிறான். பிரபு வீட்டுக்கு வந்துட்டோம் என்று ஏசி மெக்கானிக்கிடம் சொல்லும் போது, என்ன சிவாஜி மகன் பிரபு வீடா? என்று நக்கலுடன் குடிபோதையில் பேசுகிறான்.
ஏண்டா அவரை வெளியிலேயே நிறுத்தி வைத்திருக்கிறாய் என்று கேட்கும்போது, சரி சரி பேசுவதற்கு டைம் இல்லை அவரை கூப்பிட என்று கூறுகிறான் பிரபு. அவன் கூப்பிட்டாலும் வரமாட்டான் என்று சாமி கூறுகிறான் ஏனென்றால் அவன் குடிபோதையில் இருக்கிறான் இன்னைக்கு ஏசி ரெடி செய்ய முடியாது என்று கூறும்போது ஆதிரைக்கு தூக்கி வாரி போட்டது