மருமகள் : சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் இதுவும் ஒன்று. தற்போது சத்யாவால் சூடு பிடித்திருக்கும் இந்த சீரியல் நடக்கும் திடீர் திருப்பு முனைகளை பற்றி பார்க்கலாம்.
ஆதிரையும், அவரது கணவர் பிரபுவும் அவர்களது ரூமில் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருக்கின்றனர். இத்தனை பிரச்சனையும் பண்ணுகிறாளே சத்யா இன்னும் என்னென்ன பிரச்சனை எல்லாம் பண்ண போகிறாளோ என்று ஆதிரை பதட்டத்துடன் இருக்கிறாள்.
அந்த நேரம் பார்த்து, சத்யா கத்துகிறாள். குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் பதட்டத்துடன் வெளியே வருகின்றனர். என்ன இந்த இரவு நேரம் சத்தமாக இருக்கிறது என்று பயத்துடன் குடும்பத்தினர் முகத்தில் ஒரு பயம் தெரிகிறது.
AC வேணும்..
எனக்கு AC வேணும் என்று கத்துகிறாள் சத்யா. இதைப் பார்த்து பதட்டத்துடன் என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கிறாள். திடீரென உங்க ரூமில் AC இருக்கிறது. நான் அங்கே படுக்கிறேன் என்று சத்யா கூறுகிறாள். இது குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையில் “இவள் வேற பிரபுவோட உண்மையான குணம் தெரியாமல் பேசிட்டு இருக்கிறாள்” என்று பாட்டி முனுமுனுக்கிறாள். யார் என்ன சொன்னாலும் கவலையில்லை AC இல்லாமல் ஒரு நாள் இல்லை, ஒரு மணி நேரம் இல்லை, ஒரு நிமிஷம் கூட தூங்க மாட்டேன்னு சொல்கிறாள் சத்யா.
சத்யா செய்யும் இந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று தெரியாமல், பயத்தில் முழிக்கிறாள் ஆதிரை. சத்யா கிழப்பும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் எப்படி முறியடிக்க போகிறாள் ஆதிரை. பிரபு இதையெல்லாம் பொருத்து போவானா? என்பதில் சீரியல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது.