சிவகாமியின் மகனுக்கு செவுட்டிலே அறைவிட்ட மருமகள்.. நடுரோட்டில் நடந்த அசிங்கம்

விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் திருமணத்திற்கு முன்பே காதலி ஜெசியை கர்ப்பமாக்கிய சிவகாமியின் இளைய மகன் ஆதி, குடும்பத்திற்கு பயந்து ஜெசிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கை கழுவினார். அப்போது சிவகாமி ஜெசிக்கு எதிராகவும் தன்னுடைய மகள் ஆதிக்கு சப்போர்ட்டாக இருந்தார்.

அதன்பின் சந்தியா, சரவணன் உதவியால் ஜெசி ஆதியை அவருடைய குடும்பத்தினரிடம் கையும் களவுமாக மாட்டி விட்டார். பிறகு சிவகாமி ஜெசியை மருமகளாக ஏற்றுக் கொண்டார். விரைவில் அவர்களுக்கு திருமணமும் நடத்த முடிவெடுத்தார்.

ஆனால் ஆதி, ‘தன்னுடைய குடும்பத்தினர் ஏற்படும் செய்யும் திருமணத்தை செய்து கொள்ள வேண்டாம், நாம் அவர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்வோம்’ என்று ஜெசியை தூண்டி விடுகிறார்.

ஆனால் உஷாரான ஜெசி, ‘குடும்பத்திற்குள் நுழையும் போதே என்னை குற்றவாளியாக மாற்ற நினைக்கிறாயா’ என ஆதியை நடுரோட்டில் செவிட்டில் பளார் என்று அறை விடுகிறார். இதன்பிறகு ஜெசி குடும்பத்தினர் ஏற்பாடு செய்யும் திருமணத்தையே செய்துகொள்வார்.

ஆதிக்கு வளைந்து கொடுக்காத ஜெசி, திருமணத்திற்கு பிறகு முதலில் தன்னை அசிங்கப்படுத்திய மாமியாரை பழிக்குப்பழி வாங்க காத்திருக்கிறார். என்னதான் ஆதியை கணவராக ஜெசி ஏற்றுக்கொண்டாலும், அவரும் தன்னை முதலில் வேண்டாம் என்று நிராகரித்ததால், கூட இருந்தே ஆதிக்கும் அவ்வப்போது சூடு போடப் போகிறார்.

ஆலியா சென்றபின் ராஜா ராணி 2 சீரியல் கடந்த சில மாதமாகவே டல் அடித்துக் கொண்டிருப்பதால், ஜெசி போன்ற புதிய கதாபாத்திரங்களை சீரியலில் நுழைத்து, விறுவிறுப்பை கூட்ட விஜய்டிவி முயற்சி செய்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →