தனத்தின் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்ல.. சாகப் போற நேரத்துல வளைகாப்பு கேக்குதா!

Pandian Stores Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குடும்பத்தின் ஆணிவேராக இருக்கும் தனத்தை வைத்து இந்த சீரியலுக்கு எண்டு கார்டு போடத் தயாராகி விட்டார்கள். அதற்காக ஒரு சென்டிமென்ட் சீனை வைத்து பார்ப்பவர்களை திசை திருப்ப தனத்திற்கு பிரஸ்ட் கேன்சர் வைத்து உருட்டி வருகிறார்கள்.

மேலும் மருத்துவரிடம் இந்த பிரச்சனைக்கு என்ன பண்ணலாம் என்று தனம் மற்றும் மீனா போய் கேட்கிறார்கள். அதற்கு அவர்கள் கர்ப்பிணியாக இருப்பதால் முதலில் சிசேரியன் பண்ணி குழந்தையை வெளியில் எடுத்த பிறகுதான், உங்களுக்கான ட்ரீட்மென்ட் முழுவதுமாக எங்களால் பண்ண முடியும் என்று கூறுகிறார். இதைக் கேட்டதும் தனம், மீனாவிடம் ஒரு வாரம் கழித்து இதையெல்லாம் பண்ணலாம்.

அதுக்குள்ள நான் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது. அதுவரை இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சத்தியம் வாங்கி விடுகிறார். இந்த விஷயத்தை வீட்டில் சொல்லாமல் தனியாக சமாளித்து விடலாம் என்று தனம் நினைக்கிறாங்க போல. இதற்கு மீனாவும் உடந்தையாக இருக்கிறார். அட்லீஸ்ட் ஜீவாவிடம் ஆவது சொல்லி இருக்கலாம். இருந்தாலும் தனத்திற்கு மனதளவில் ரொம்பவே பயம் பயந்துவிட்டது.

நம் உயிர் போகப்போகுது என்பதால் அதற்குள் குடும்பத்தில் செய்ய வேண்டிய பொறுப்புகளை செய்து விடலாம் என்று நினைக்கிறார். அதற்காக மூர்த்தியிடம் நம் கட்டிக் கொண்டிருக்கும் வீடு என்ன நிலவரத்தில் இருக்கிறது என்று கேட்கிறார். ஆனால் அதன் பிறகு தான் நமக்கே தெரிகிறது எப்பொழுது இவர்கள் வீடு கட்ட ஆரம்பித்தார்கள் என்று.

ஆனால் அதற்குள் சீக்கிரத்தில் இந்த வீடை கட்டி முடித்து விட வேண்டும் நாம் அனைவரும் அதில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் ஐஸ்வர்யாவின் வளைகாப்பை நடத்தலாமா என்று மூர்த்தியிடம் கேட்கிறார்.

அவரும் ஓகே என்று சொல்லி அதற்கான வேலைகள் தடபுடலாக நடக்க ஆரம்பித்து விட்டது. அதாவது இவர் செய்வது எப்படி இருக்குது என்றால் குடும்பத்தின் மேல் பொறுப்பும் அக்கறையும் இவருக்கு தான் இருக்கிறது என்றும், அத்துடன் நமக்கு ஏதாவது ஆகவதற்குள் எல்லாத்தையும் சரியாக செய்து முடித்து விட வேண்டும் என்ற ஆசையில் அனைத்தையும் செய்ய இருக்கிறார்.