அரசியல்வாதிகளுக்கு வலைவிரித்தாரா VJ சித்ரா.? பல கோடி சொத்துக்கு ஆசை பட்டதால் உயிரைவிட்ட சோகம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் விஜே சித்ரா. இவர் ஆரம்பத்தில் தொகுப்பாளனியாக தனது பயணத்தை தொடங்கினார். சன் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவி என இவர் வேலை பார்க்காத தொலைக்காட்சியை இல்லை என்று சொல்லலாம்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் விஜே சித்ரா நடித்துள்ளார். இந்நிலையை கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எதிர்பாராத விதமாக ஒரு ஹோட்டலில் சித்ரா தூக்கிட்ட தற்கொலை செய்து கொண்டார். இது சின்னத்திரை வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

சித்ராவை பற்றி பல அதிர்ச்சி தரும் தகவல்களை பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தார். அதாவது ஒரு சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி வரும்போது புரோகிராம் ஹெட்டை மது பழக்கத்திற்கு அடிமை ஆக்கி அவரது சொத்தை சித்ரா எழுதி வாங்கி உள்ளார. அதுமட்டுமின்றி ஒரு நிகழ்ச்சியில் அரசியல்வாதியை பேட்டி எடுத்துள்ளார்.

இதன் மூலம் அரசியல்வாதி உடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அப்போது ப்ரோக்ராம் ஹெட் தனது சொத்துக்களை கேட்கும்போது இந்த அரசியல்வாதியை வைத்து சித்ரா மிரட்டி உள்ளாராம். ஒரே கட்டத்தில் அரசியல்வாதிக்கும் இதே நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதாவது சித்ரா தன்னை ஏமாற்றி சொத்துக்களை அபகரித்த விஷயத்தை அறிந்த அரசியல்வாதி சித்ராவை மிரட்டி உள்ளார். அந்த சமயத்தில் ஆளும் கட்சியில் உள்ள நபரிடம் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அந்த அரசியல்வாதியின் வாயை அடக்கச் செய்துள்ளார்.

இவ்வாறு பல கோடி சொத்துக்காக நிறைய பேரை ஏமாற்றியதால் தான் சித்ராவின் வாழ்க்கை இவ்வாறு பாதியிலேயே முடிந்ததாக பயில்வான் ரங்கநாதன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஆனால் இதில் பலர் சித்ராவுக்கு ஆதரவாக தான் பேசி வருகிறார்கள்.