விஜே பிரியங்காவின் கணவர் யார் தெரியுமா.? ஜாடிக்கு கேத்த மூடி தான்

VJ Priyanka: விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த பிரியங்கா இன்று திருமணம் செய்து கொண்டுள்ளார். இவரது கல்யாண புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது.

விஜய் டிவியில் பணியாற்றிய பிரவீனை பிரியங்கா திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து செய்துவிட்டனர். அதன்பிறகு பிரியங்கா சிங்கிளாக தான் வாழ்ந்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்கா பங்குபெற்ற நிலையில் மணிமேகலை இடையே சண்டை ஏற்பட்டது. இதில் பலரும் மணிமேகலைக்கு ஆதரவாக பேசிய நிலையில் பிரியங்கா மிகுந்த மனமுடைந்து போய்விட்டார்.

விஜே பிரியங்காவின் கணவர் யார் தெரியுமா.?

இதை தொடர்ந்து கம்பேக் கொடுத்திருந்தார். இந்த சூழலில் வசி என்பவரை இரண்டாவதாக பிரியங்கா திருமணம் செய்து இருக்கிறார். பிரியங்காவின் கணவர் வசி விஜேவாக இருந்து வருகிறார்.

இவர் பார்ட்டி மற்றும் திருமண வரவேற்பு போன்றவற்றில் தனது குழு உடன் சென்று பாடல் கச்சேரிகளை செய்து வருகிறார். அதுவும் மூன்று வருடத்திற்கு முன்பே இவரது நிகழ்ச்சியில் பிரியங்காவும் பாடி இருக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது.

ஆகையால் நீண்டகால நண்பரை தான் பிரியங்கா மனம் முடித்திருக்கிறார். அதோடு பிரியங்கா விஜேவாக இருக்க, அவரது கணவர் வசி டிஜேவாக இருக்கிறார். ஜாடிக்கு கேத்த மூடியை தான் பிரியங்கா பிடித்திருக்கிறார்.