கர்ப்பமாக இருக்கும் வயிற்றைக் காட்டி புகைப்படம் வெளியிட்ட எரும சாணி ஹரிஜா.. தாய்மை உணர்த்தும் போட்டோ

எரும சாணி என்ற யூடியூப் சேனலின் மூலம் பிரபலமடைந்தவர் ஹரிஜா. இவரின் போடா எரும சாணி கிறுக்கு பயலே என்ற வசனம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

அதிக பார்வையாளர்களை கொண்ட யூடியூப் சேனல்களில் இதுவும் ஒன்று. விஜய்யும் ஹரிஜாவும் சேர்ந்து செய்யும் அட்டகாசங்கள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

முன்னெல்லாம் சினிமாவில் சேர்வதற்கு ரொம்ப கஷ்டப் பட்டதாக பல முன்னணி நடிகர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால் தற்போது பலர் தங்களது திறமைகளை யூடியூப் சேனல்களில் வெளிப்படுத்தி நேரடியாக சினிமாவில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் புகழ்பெற்ற ஹரிஜா தனது காதலரான அமர் ரமேஷ் உடன் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். ஹரிஜா தற்போது ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற திரைப்படத்தில் லீடு ரோலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

harija-cinemapettai-01
harija-cinemapettai-01

சமீபத்தில்தான் ஹரிஜா ஒரு குழந்தையை பெற்றெடுத்து தாயானார். தற்போது குழந்தை பெற்ற பிறகு உடல் எடை கூடாமல் என்பதற்காக தன்னுடைய யூடியூப் சேனலில் ஒர்க்கவுட் வீடியோவை வெளியிட்டிருந்தார்.

harija-cinemapettai-02
harija-cinemapettai-02

அதனைத் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்ப காலத்தில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு தாய்மார்களின் பேராதரவைப் பெற்றுள்ளார்.