மனக்கோளத்தில் தயாராகி இருக்கும் பார்கவி.. தர்ஷனுக்காக போராடும் சக்தி

ethirneechal 2 serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், கல்யாணத்துக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் பட்சத்தில் குணசேகரன் கும்பல் மண்டபத்திற்கு வந்து விட்டார்கள். இதனால் ஏதாவது சூழ்ச்சி இருக்குமோ என்று ஜனனி, ஜீவானந்துக்கு போன் பண்ணி சொல்கிறார். அதாவது இரண்டு நாளுக்கு அப்புறம் தான் கல்யாணம் என்று பத்திரிக்கையில் அடித்து விட்டு அதற்கு முன்னரே தர்ஷனை வைத்து அன்புக்கரசி கழுத்தில் தாலி கட்டுவதற்கு பிளான் பண்ணி வைத்திருக்கிறார்கள்.

ஆனால் இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் பட்சத்தில் ஏன் பார்கவியை பொண்ணு மாதிரி தயாராகி இருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் இதை பார்க்கும் பொழுது குணசேகரன் போட்ட பிளானுக்கு எதிராக ஜீவானந்தம் ஏதோ ஒரு சம்பவம் செய்யப்போகிறார் என்பது மட்டும் தெரிகிறது.

இதனை அடுத்து அறிவுக்கரசி, தர்ஷன் தன்னுடைய பேச்சைக் கேட்டு எப்பொழுதும் இருக்க வேண்டும் என்பதற்காக அவனுக்கு மயக்க மருந்து கொடுத்து புத்தி பேதலித்தது போல் கிறங்க வைத்து விட்டார். இதை கண்டுபிடித்த சக்தி, மண்டபத்திற்கு சென்று தர்ஷனை கூட்டிட்டு வந்து குணசேகரனிடம் நியாயம் கேட்கும் விதமாக உங்களுடைய பிடிவாதத்தில் இவன் ஏன் பாதிக்கப்பட வேண்டும்.

கல்யாணம் பண்ணுவது இரண்டாவது விஷயம் ஆனால் இவன் எப்பொழுதும் போல் சுயநினைவுடன் இருக்க வேண்டும் என்று குணசேகரிடம் சண்டை போடுகிறார். அதற்கு குணசேகரன் இப்பொழுது என்ன பண்ண வேண்டும் என்று கேட்கிறார். உடனே சக்தி, டாக்டர் இங்கே வந்து தர்ஷன் ஏன் இப்படி இருக்கிறான் என்று கண்டுபிடித்து சொல்ல வேண்டும்.

அத்துடன் அவன் பழைய மாதிரி மாற வேண்டும் என்றால் அதற்கு ஏற்ற ட்ரீட்மென்ட் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார். சக்தி சொல்வதற்கு விசாலாட்சியும் சப்போர்ட் பண்ணுவதால் குணசேகரன் டாக்டரை வர சொல்லி தர்ஷனை சரி செய்ய போகிறார். இதனால் அறிவுக்கரசி போட்ட திட்டம் சொதப்பலாக போகிறது, அது மட்டுமில்லாமல் இந்த விஷயத்தில் பெண்களுக்கு வெற்றி என்று சொல்வதற்கு ஏற்ப தர்ஷன் பார்கவியுடன் கல்யாணம் நடக்கப்போகிறது.