Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், அரக்கத்தனத்தின் சுயரூபமாக இருக்கும் குணசேகரின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது தெரிந்தும் ஈஸ்வரி, குணசேகரனிடம் பேசிப் பார்க்கலாம் என்று போனதுதான் மிகப்பெரிய தவறானது. குணசேகரன் நினைக்கிறது தான் நடக்க வேண்டும் என்று நினைக்க கூடிய ஆளு.
அவரிடம் போய் நியாயம் தர்மத்தை பேசி பாசத்தை எதிர்பார்த்தால் எப்படி அது சாத்தியமாக இருக்கும். தர்ஷன் அன்புகரசியின் கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று ஈஸ்வரி வேண்டுகோள் வைத்தார். ஆனால் குணசேகரன் இதை யார் சொன்னாலும் நான் நிறுத்த மாட்டேன். நான் நெனச்சதை நடத்திக் காட்டுவேன் என்று சொல்லிய நிலையில் ஈஸ்வரி மற்றும் குணசேகருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
உடனே கோவப்பட்ட குணசேகரன் வன்மத்தை காட்டும் விதமாக ஈஸ்வரி கழுத்தை நெரித்துவிட்டு கீழே தள்ளி விடுகிறார். இதனால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடும் ஈஸ்வரியின் நிலைமையை பார்த்து நந்தினி துடிதுடித்துப் போய் விடுகிறார். ஆனாலும் அந்த நிலைமையில் நந்தினி உதவி என்று மற்றவர்களிடம் கேட்ட பொழுது யாரும் உதவி செய்யாமல் வேடிக்கை மட்டும் பார்த்தார்கள்.
பிறகு தர்ஷன் தர்ஷினி உதவியுடன் நந்தினி, ஈஸ்வரிய ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்து விடுகிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரேணுகா ஜனனி ஹாஸ்பிடல் வந்து விடுகிறார்கள். அந்த வகையில் டாக்டர் சொன்னது என்னவென்றால் ஈஸ்வரியின் தலையில் அடிபட்டு இருப்பதால் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது ஆபரேஷன் பண்ணியாக வேண்டும்.
ஆனால் அதுவும் எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பது தெரியாது. கோமா ஸ்டேஜ்க்கு போகும் நிலைமை கூட ஏற்படலாம் என்று டாக்டர் அதிர்ச்சியை கொடுத்து விட்டார்கள். இதனால் தர்ஷன் தர்ஷினி அனைவரும் இடிந்து போய்விட்டார்கள். இவ்வளவு தூரம் நடந்த பிறகு கூட குணசேகரன், அன்புக்கரசிக்கும் தர்ஷனுக்கும் கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
ஆனால் இதற்கு ஒரு முடிவு கட்டும் விதமாக பரோலில் வந்த குணசேகரன், ஈஸ்வரியை கொலை செய்ய குற்றத்திற்காக நிச்சயம் தண்டனை அனுபவிக்கும் விதமாக ஜெயிலுக்கு போக வேண்டும். அத்துடன் ஈஸ்வரிக்கும் எதுவும் ஆகாமல் திரும்ப வர வேண்டும். அது மட்டுமல்ல இனிதான் ஜீவானந்தத்தின் ஆட்டமே இருக்கிறது என்று சொல்வதற்கேற்ப போக இருந்த பார்கவி ஈஸ்வரிக்காக கனடா போகாமல் குணசேகரன் கண்ணில் விரலை விட்டு ஆட்டப் போகிறார்.
மேலும் இந்த நிகழ்ச்சி இதுவரை திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் டாப்பு குக்கு டுப்பு குக்கு நிகழ்ச்சி இரண்டாவது சீசன் ஆரம்பமாக இருப்பதால் இனி எதிர்நீச்சல் சீரியல் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை மட்டுமே ஒளிபரப்பாக போகிறது.