Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், சுயநினைவை இழக்கும் விதமாக சீரியசாக ஈஸ்வரி ஆஸ்பத்திரியில் இருக்கிறார். ஆனால் இந்த நிலைமைக்கு காரணமான குணசேகரன் மீது யாரும் சந்தேகப்படவில்லை. ஜனனி ஈஸ்வரிக்கு எதுவும் ஆகிட கூடாது என்ற பதட்டத்தில் இருப்பதால் குணசேகரன் இந்த விஷயத்தில் இருந்து ஈசியாக எஸ்கேப் ஆகிவிடுகிறார்.
அத்துடன் இந்த விஷயத்தை தர்ஷினி, ஜீவானந்தத்திற்கு போன் பண்ணி சொல்லி அழுகிறார். பிறகு பார்க்கவி என்னாச்சு என்று கேட்ட நிலையில் ஜீவானந்தம் ஈஸ்வரிக்கு உடம்பு சரியில்லை, ஆஸ்பத்திரியில் இருப்பதை சொல்லுகிறார். இதை கேள்விப்பட்ட பார்க்கவி நிச்சயம் ஈஸ்வரியை பார்க்க வேண்டும் என்று ஜீவானந்தத்தை கூட்டிட்டு ஹாஸ்பிடலுக்கு கிளம்பி விடுவார்.
அங்கே போனதும் ஈஸ்வரி நிலைமையை பார்த்த பார்கவி கனடா போகாமல் அங்கேயே இருந்து விடுவார். மேலும் ஈஸ்வரியின் நிலைமையை தெரிந்து கொண்ட விஷாலாட்சி என்ன இருந்தாலும் இந்த வீட்டின் மூத்த மருமகள். இப்படி ஒரு நிலைமை என்றால் நிச்சயம் நான் பார்க்க போக வேண்டும் என்று கதிரை கூப்பிடுகிறார். ஆனால் வன்மத்தின் உச்சத்தில் இருக்கும் குணசேகரன், விசாலாட்சி பார்க்க போகக்கூடாது என்று சொல்கிறார்.
அப்படி மீறிப் போனால் என்னையும் இந்த குடும்பத்தையும் தலைமுழுகிட்டு ஒரேடியாக போகச் சொல்லு என்று சொல்லிய நிலையில் ஈஸ்வரியை பார்க்க முடியாமல் வீட்டில் இருந்து துடித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை, இருக்கும் பொழுது ஆட்டிப் படைக்க வேண்டியது. இப்பொழுது ஒரு ஆபத்து என்றதும் கண்ணீர் விட்டு அழ வேண்டியது.
இந்த வீட்டுக்கு மருமகள் திரும்ப வந்ததற்கு இந்த விசாலாட்சி தான் காரணம். இப்பொழுது நீலி கண்ணீர் வடித்து டிராமா பண்ணுகிறது. மேலும் நடந்த விஷயத்தை எல்லாம் வைத்து குணசேகரன் மீது அறிவுக்கரசி சந்தேகப்படுகிறார். அப்படிப்பட்ட இந்த வீட்டிற்கு அவளுடைய தங்கையும் வந்தால் இதே நிலைமைதான் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் பிடிவாதத்திற்கு அன்புகரசியை பலியாக்குகிறார்.
ஆனால் ஈஸ்வரி ரத்த வெள்ளத்தில் கடந்ததை பார்த்து கதிர் முகம் கொஞ்சம் வாடிப் போய்விட்டது. அத்துடன் இதற்கு காரணம் தன்னுடைய அண்ணனாக இருக்குமோ என்ற சந்தேகமும் கதிருக்கு இருப்பதால் குணசேகரை விட்டு தனியாகவே இருக்கலாம் என்று கதிர் மனசு மாறப்போகிறது. ஆனாலும் கதிர், இனி மாறினால் என்ன மாறாவிட்டால் என்ன. அந்த அளவுக்கு செய்யாத அக்கிரமத்தை எல்லாம் செய்து முடித்து விட்டார். இதற்கெல்லாம் தண்டனை அனுபவித்தால் தான் விமோசனம் கிடைக்கும்.