விட்டா ட்ரோனை வேட்டி குள்ள விற்றுவாங்க.. எதிர்நீச்சல் குணசேகரன் ஃபேமஸ் ஆன கெத்தான 5 டயலாக்

ஒரு நாடகம் இந்த அளவுக்கு ஃபேமஸ் ஆயிட்டு இருக்குன்னா அதற்கு முக்கியமான காரணம் குணசேகரன் தான். இவருடைய எதார்த்தமான பேச்சு, நடிப்பு மற்றும் டயலாக். இவரை பார்ப்பதற்காகவே இந்த நாடகத்தை பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட இவர், பேசிய வசனங்கள் இப்பொழுது தக் லைஃப் டிரெண்டாக மாறி வருகிறது. அதிலும் முக்கியமாக இவர் பேசிய ஐந்து டயலாக் வெறித்தனமாக இருக்கிறது. அது என்னென்ன டயலாக் என்று பார்ப்போம்.

ஜனனிக்கும், சக்திக்கும் திருமணம் நடந்த பொழுது அந்த மண்டபத்தில் ஜனனியின் ஃபிரண்ட்ஸ் அனைவரும் டான்ஸ் ஆடி, அவரை கூட்டிட்டு வருவதை பார்த்த குணசேகரன் ரொம்பமே காண்ட் ஆகிவிட்டார். உடனே ஏய் என்னமா என்ன பண்ணிட்டு இருக்கீங்க கல்யாண வீட்ல வந்து டான்ஸ் ஆடிட்டு இருக்கீங்க என்று கேட்க அதற்கு அந்த பொண்ணு இல்ல அங்கிள் இதுதான் இப்ப ட்ரெண்டு என்று சொல்ல அதற்கு நம்ம குணசேகரன் ஆவுன்னா அதை வந்து சொல்லிட்டு வந்துடுங்க டிரெண்டு ட்ரொண்டுன்னு என்று ரைமிங்கா பேசி இருப்பாரு.

அடுத்ததாக மதுரை பேச்சு தான் பேசியாகனும் என்று முயற்சி செய்து குணசேகரனின் அம்மா ஆஹா ஆஹா என்று இழுத்துட்டு பேசும்போது கொஞ்சம் கடுப்பாக இருந்தாலும் வேற வழியில்லை கேட்டு தான் ஆகணும். வீட்டில சாமி இருக்கு சுத்த பத்தமா எல்லாத்தையும் பண்ணிக்கிட்டு இருக்கோம்.  இவன் இப்படி பண்ணிட்டு இருந்தா எப்படி என்று கேட்க. அதற்கு நம்ம குணசேகரன், சாமி அது இருக்க வேண்டிய இடத்தில் இருக்குமா, கதிர் ரூமுக்குள்ள இருந்து தானே குடிச்சிட்டு இருக்கான் அதை விட்டு தொலை அம்மா என்று சொல்லி தக் லைஃப் கிங் ஆக மாறிவிட்டார்.

அதே மாதிரி சக்தி மற்றும் ஜனனி திருமணத்தில் அந்த போட்டோ காரரையும் ஒரு வழி பண்ணிட்டாரு. பொதுவாக எல்லா கல்யாணத்துலையும் போட்டோ எடுக்குறது வழக்கம்தான். அதே மாதிரி இந்த காலத்திற்கு ஏற்ற மாதிரி ட்ரோன் கேமராவை வச்சு போட்டோ எடுத்திருக்கிறார். அது புரியாம நம்ம குணசேகரன் கேமராவை பார்த்து இந்த வந்துருச்சு பாரு கருமம். விட்டா ட்ரோனை வேட்டி குள்ள விற்றுவாங்க அப்படி சொன்னது வெறித்தனம் வெறித்தனம் மாதிரி இருந்துச்சு.

இவ்ளோ செஞ்சவர் நம்ம கதிரையும் வச்சா பாப்பாரு, அதாங்க நம்ம ஆதிரை கல்யாணத்துக்காக ஒரு லிஸ்ட் போட சொன்னாரு யார் யாரை கூப்பிடனும். அதற்கு தம்பின்னு கூட பாக்காம அவரையும் எப்போதும் போல செஞ்சிட்டாரு. அதாவது உனக்கு தெரிஞ்சவங்க பேர் எல்லாம் இதுல எழுதித்தா என்று கேட்க. உடனே அவரே அதற்கு பதிலாக ஆமா உனக்கு தெரிஞ்சவங்க எல்லாம் பொம்பளைங்கள்தான் அதிகமாக இருக்கும் இருந்தாலும் பரவாயில்லை எழுதி தா. என்று சொல்லி தலைவா வேற ரகம் என்று காட்டிட்டார்.

கடைசியாக அந்த வீட்டு வேலைக்காரனையும் சும்மா விடவில்லை. அவர் வந்து ஐயா வணக்கம் என்று சொல்ல உடனே நம்ம குணசேகரன் யாருடா நீ என்று கேட்க அதற்கு அவர் என்ன தெரியலையா ஐயா நான் தான் ராணி புருஷன், அதற்கு அவர் எந்த நாட்டுக்கு நீ ராணி புருஷன் என்று கேட்க இவருடைய குசும்புக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது.