Ethirneechal Gunasekaran Salary: சினிமாவில் நடிகர், நடிகைகளுக்கு எந்த அளவுக்கு மவுஸ் இருக்கிறதோ அதற்கு இணையாக சீரியலில் நடிக்கக்கூடிய ஆர்டிஸ்ட்களுக்கும் மக்களிடத்தில் பெரிய வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில் அனைத்து குடும்பங்களிலும் சமீபகாலமாக ஒரு கேரக்டர் பெரிய அளவில் ரசித்துப் பார்க்கப்பட்டு வருகிறது.
அதாவது தற்போது ட்ரெண்டிங்கில் போய்க் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் நாடகத்தின் வில்லன், நடிகர் மற்றும் காமெடியன் என அனைத்தையும் இவர் ஒருவரை செய்து கலக்கிக் கொண்டிருக்கும் ஆதி குணசேகரன் தான். இவருடைய கேரக்டர் படி பெண்கள் என்றால் சமைப்பதற்கும், வீட்டு வேலைகளை பார்ப்பதற்கும் தான் தகுதியானவர் என்று அவர்களை அடிமைத்தனமாக வைத்திருக்கக் கூடியவர்.
பொதுவாக இந்த மாதிரி கேரக்டர்களை பார்த்தாலே நமக்கு கடுப்பாகும். அதே நேரத்தில் இந்த ஒரு கேரக்டரை வாழ்க்கையில் சந்தித்து விடவே கூடாது என்று நினைக்க வைக்கும். ஆனால் இதையெல்லாம் செய்கிற குணசேகரனை தினமும் நம் கண்கொண்டு பார்த்துட்டு வருகிறோம்.
ஆனாலும் இவர் மேல் கோபம் இருக்கிறதை விட, இவருக்காக தான் இந்த நாடகம் பார்க்கிறோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இவருடைய பெயர் கொடி கட்டி பறக்கிறது. அதனாலேயே இந்த நாடகத்தின் ஆணிவேராக இருக்கிறார். அந்த காரணத்திற்காக சம்பளமும் இவர் தான் அதிகமாக வாங்கிக் கொண்டு வருகிறார்.
இன்னும் சொல்லப்போனால் சின்ன திரையிலேயே அதிகமான சம்பளத்தை வாங்கக் கூடிய நடிகர் என்று இவரை சொல்லலாம். அதாவது இவருடைய சம்பளம் மாதத்திற்கு 10 லட்சம் ரூபாய் வரை வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி என்றால் வருட சம்பளம் கோடிக்கணக்கில் நடிகர்களுக்கு நிகரான சம்பளத்தை பெற்று வருகிறார்.
சின்னத்திரையில் முதன்முதலாக ஒரு வில்லனுக்கு அதுவும் ஆணாதிக்கம் பிடித்த ஒரு கேரக்டருக்கு இவ்வளவு சம்பளம் என்பது ரொம்பவே வியப்பாக இருக்கிறது. இது அத்தனைக்கும் காரணம் இவருடைய எதார்த்தமான நடிப்பும், தைரியமான பேச்சும் தான். மேலும் இவருக்காக தான் நாடகமே பார்க்கிறோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு மக்கள் நாயகனாக சீரியலில் ஜொலித்துக் கொண்டு வருகிறார்.