ethirneechal serial 2: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், ஜாமினில் வந்த ஜனனி, குணசேகரனிடம் மோதும் விதமாக வீட்டிற்கு வந்து குடும்பம் பாசம் என்று கொஞ்சம் கரிசனம் இதுவரை இருந்தது. அதனால் தான் நீங்கள் பண்ணின எல்லா தவறுக்கும் தண்டனை அனுபவிக்காமல் இப்படி இங்கே உட்கார்ந்து இருக்கீங்க.
ஆனால் எப்பொழுது ஈஸ்வரி அக்காவிற்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டதோ, இனியும் பார்த்துவிட்டு சும்மா இருக்க மாட்டேன். இன்னும் ரெண்டு நாளுக்குள் எல்லா ஆதாரத்தையும் கொண்டு வந்து உங்களை நான் ஜெயிலுக்குள் அனுப்பி உங்களுடைய ஆட்டத்தை முடித்து வைக்கிறேன் என்று சவால் விடும் அளவிற்கு ஜனனி குணசேகருக்கு கெடு வைக்கிறார்.
இதை பார்த்து கொந்தளித்த கதிர், ஜனணியை அடிக்க போகும் பொழுது சக்தி, கதிரை தூக்கிப் போட்டு மிதித்து ஓரமாக அடக்கி விட்டார். அந்த வகையில் வெட்டுவேன் குத்துவேன் என்று யாராவது சொல்லிக்கிட்டு வந்தா அவர்களை நான் காலி பண்ணி விடுவேன் என்று ஜனனிக்கு சப்போர்ட்டாக பேசி சக்தி, கதிரை அடக்கி விட்டான்.
இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலுக்கு போகக்கூடாது ஈஸ்வரியை பார்க்க கூடாது என்று தர்ஷனுக்கு கண்டிஷன் போடும் அறிவுகரசியிடம் என்னை எங்க அம்மாவை பார்க்க கூடாது என்று சொல்லக்கூடாது. அப்படி சொன்னீங்க என்றால் இந்த கல்யாணம் நீங்கள் நினைத்தபடி நடக்காது என்று பிளாக் மெயில் பண்ணி தர்ஷன் ஹாஸ்பிடலுக்கு போய் விடுகிறார்.
அடுத்ததாக ஹாஸ்பிடல் இருக்கும் சக்தியிடம் ரேணுகா மற்றும் நந்தினி இருவரும் சேர்ந்து எந்த பிரச்சனை வந்தாலும் நீ ஜனனிக்கு சப்போர்ட் பண்ணி நியாயத்து பக்கம் இருக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். அதற்கு சக்தி இனி நான் உங்கள் பக்கம் தான் எங்கேயும் போக மாட்டேன் என்று ஆறுதலாக பேசி விடுகிறார்.
ஜனனி ஆவேசத்தை பார்க்கும் பொழுது இன்னும் இரண்டு நாளில் குணசேகரன் செய்த அட்டூழியத்தை கண்டுபிடித்து நிச்சயம் தண்டனை வாங்கி கொடுத்து விடுவார். மேலும் ஈஸ்வரிக்கும் எந்த பிரச்சினையும் இல்லாமல் வந்து குணசேகரனுக்கு எதிராக சாட்சி சொல்லப் போகிறார்.