வில்லத்தனத்தில் கதிகலங்க வைத்த ஆதி குணசேகரன்.. மொத்தமாக மாறிய கேரக்டர், திசை மாறும் எதிர்நீச்சல்

Ethirneechal Serial: கடந்த சில வாரங்களாகவே யார் அடுத்த ஆதி குணசேகரன் என்ற பரபரப்பு தான் எதிர்நீச்சல் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. அதில் பல பெயர்கள் பரிசீலனையில் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக அனைவரும் எதிர்பார்த்த வேலராமமூர்த்தி தான் தற்போது மாஸ் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

நேற்று இவருக்கு பதில் இவர் என்று மாரிமுத்து போட்டோவை காட்டிய போது ஒட்டுமொத்த ரசிகர்களின் மனமும் கனத்துப் போனது. இருந்தாலும் வேல ராமமூர்த்தி எந்த அளவுக்கு இந்த கேரக்டருக்கு நியாயம் சேர்ப்பார் என்ற எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் எழ தவறவில்லை.

ஏனென்றால் இந்த கதாபாத்திரம் நெகட்டிவ் ஆக இருந்தாலும் மாரிமுத்து டைமிங் காமெடி வசனங்கள் மற்றும் கண் பார்வையிலேயே அதன் சுவாரசியத்தை அதிகமாக்கினார். அதுவே இந்த அளவுக்கு சீரியல் மக்களிடையே சென்றடைவதற்கும் காரணமாக இருந்தது.

ஆனால் நேற்று வேலராமமூர்த்தி வேட்டியை மடித்துக் கட்டி கொண்டு சண்டைக்கு பாய்ந்ததை பார்க்கும் போதே ஒட்டுமொத்த வில்லத்தனமும் கேரக்டருக்குள் வந்ததை உணர முடிந்தது. அந்த வகையில் புது குணசேகரனின் கேரக்டரும் இனிமேல் இதை நோக்கித்தான் பயணமாகும் என்பதும் வெட்ட வெளிச்சமானது.

இது ஒரு விதத்தில் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் மாரிமுத்து இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. வேல ராமமூர்த்தி தன்னுடைய ஸ்டைல் மூலம் இந்த கதாபாத்திரத்தை கொண்டு செல்வார் என்ற நிதர்சனமும் தெரிந்தது. அந்த வகையில் இனிமேல் எதிர்நீச்சல் சீரியலின் கதை போக்கும் திசை மாறும் என்பதும் உறுதியாகிவிட்டது.

ஆக மொத்தம் வேலராமமூர்த்தியை மாரிமுத்துவோடு ஒப்பிடாமல் சீரியலை அதன் போக்கில் ரசிப்பதற்கும் ஆடியன்ஸ் தயாராகி விட்டனர். இப்படியாக முதல் நாளிலேயே கடும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் வேலராமமூர்த்தி ஆதி குணசேகரனாக ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் தனக்கான ஒரு இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →