மொத்தமா குழி தோண்டி மூடிய எதிர்நீச்சல்.. செட் ஆகும் 3 கேரக்டரை ஒதுக்கி குட்டிச்சுவராக்கிய ஜீவானந்தம்

இல்லத்தரசிகளுக்கு இடியாய் விழுந்தது எதிர்நீச்சல் குணசேகரனின் இறப்பு. தினமும் அவர் முகத்தை பார்க்கவில்லை என்றால் தூக்கமே வராத நிலை ஏற்படுத்திவிட்டு இவ்வுலகை பிரிந்து சென்றார் மாரிமுத்து. சீரியலில் வன்மம் காட்டி நடித்தாலும் அவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.

இப்பொழுது அந்த சீரியலின் டிஆர்பி ஒட்டுமொத்தமாக குறைந்துள்ளது. இதற்கு காரணம் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்கும் வேல ராமமூர்த்தி. இவர் வெள்ளிதிரையில் மிகவும் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். அது மட்டும் இன்றி இவர் கதாபாத்திரங்கள் எல்லாம் வெட்டு, குத்து என்ற அளவில் தான் இருக்கும். இவரை சினிமாவில் பார்த்த இல்லத்தரசிகள் எல்லோரும் பயந்து நடுங்கும் அளவிற்கு தான் இவர் கதாபாத்திரம் இருந்தது..

எதிர்நீச்சல் குணசேகரன் கதாபாத்திரமே வேறு, வார்த்தையினாலே அனைவரையும் காயப்படுத்தும் கதாபாத்திரம், ஆனால் அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது வேல ராமமூர்த்தி கதாபாத்திரம். போலீஸ்காரர்களையே அடித்து நொறுக்கிய அவர் எப்படி குடும்பத்தில் உள்ள பெண்களை நடத்துவார் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயமாக இருக்கிறது.

ஆனால் மக்கள் 3 கதாபாத்திரங்களை விரும்புகின்றனர். இவர்கள் மூவரும் குணசேகரனின் கதாபாத்திரம் ஏற்று நடித்தால் நன்றாக இருக்கும் என பரிந்துரைக்கின்றனர். சிரிப்பு மட்டும் இன்றி வார்த்தை மற்றும் பார்வையால் மிரட்டும் அளவிற்கு இவர்களுக்கு திறமை இருக்கிறது, இவர்களை போட்டால் மட்டுமே காமெடி மற்றும் ஆக்ரோசமாக குணசேகரன் பார்க்கலாம் என்கிறார்கள்.

இளவரசு, அழகம்பெருமாள், பசுபதி போன்ற காமெடி கலந்த கேரக்டருக்கு இந்த கதாபாத்திரங்களை போட்டால் நன்றாக இருக்கும். இவர்கள் மூவருக்கும் குணசேகரின் பாடி லாங்குவேஜ் ஒத்துப்போகும். குறிப்பாக இளவரசு வண்ணம் கலந்த கேரக்டரில் நிறைய படங்களில் சாதித்துக் காட்டி இருக்கிறார். அதை போல் தான் அழகம்பெருமாலும், பசுபதியும்.

இப்பொழுது இருக்கும் வேலராமமூர்த்தி கதாபாத்திரம் பார்த்தாலே பயமுறுத்தும் அளவிற்கு இருக்கிறது. ஏற்கனவே இந்த கேரக்டருக்கு பெரிதும் பில்டர் கொடுத்து வருகிறார்கள்.மாரிமுத்து இறந்து 50 நாட்கள் போதை ஆயிட்டியேப்பா ஆகாதுஆகியும் இந்த கதாபாத்திரம் பெரிதும் சோபிக்கவில்லை. அவர் இறப்புக்கு பின்னரே டிஆர்பி யில் மந்த நிலை தான் இந்த சீரியலுக்கு காணப்படுகிறது.

thenmozhi

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →