1992 ஆம் ஆண்டு ஸ்ரீராம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா பாஸ்கரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த காதல் திரைப்படம் தான் மீரா. இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா பாஸ்கரன் பழம்பெரும் நடிகையான லட்சுமியின் மகள் ஆக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் வில்லியாகவும் நடித்து பிரபலமானார்.
அதுமட்டுமின்றி இவர் தமிழ், மலையாள சீரியல்களிலும் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். ஐஸ்வர்யா சமீபத்திய பேட்டி ஒன்றில், மீரா படத்திற்காக லிப்-லாக் காட்சி ஒன்றை எடுக்கும்போது எனக்கு ரோமன்சே வரவில்லை. ஏனென்றால் படப்பிடிப்பு தளத்தில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் இருக்கும் இடத்தில் அந்த காட்சி எடுக்கப்படும்போது டெக்னீசியன் கேமராமேன் என எல்லோருமே அதில் கால்வைத்து நடந்தார்கள்.
அந்த தண்ணீரிலேயே விக்ரம் என்னை முக்கி எடுத்து ஆத்திரத்தில் முத்தமிடுவது போல் காட்சி எடுக்கப்படும். ஆனால் அந்த சமயத்தில் எனக்கு கொஞ்சம் கூட ரொமான்ஸ் வரவில்லை. வாந்தி தான் வந்தது.
ஏனென்றால் செருப்பு காலுடன் பலரும் நடந்து சென்ற அந்தத் தண்ணீர் என்னுடைய வாய்க்குள்ளும், மூக்கிற்குள்ளும் சென்றது. அதுமட்டுமின்றி தண்ணீரில் என்னை முக்கும் பொழுது நான் மூச்சை தம் கட்டி கொள்வேன்.
அப்படி இருக்கும்போது எனக்கு ரொமான்ஸ் வருவது மிகவும் கஷ்டமாக இருந்தது. இதனால் விக்ரம் எனக்கு முத்தம் கொடுக்க நெருங்கும் பொழுது வாந்தி மட்டுமே வந்தது. அத்துடன் இந்தப்படத்தின் ஆரம்பத்தில் விக்ரமிற்க்கும் எனக்கும் சண்டை வந்தது. தற்போது நண்பர்களாக மாறி விட்டதாக ஐஸ்வர்யா கூறினார்.