தற்போது தொலைக்காட்சிகள் டிஆர்பிக்காக பல யுக்திகளை கையாண்டு வருகிறார்கள். அந்த வகையில் சீரியல்கள் என்றாலே சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகிய மூன்றில் தான் ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து வருகிறார்கள். அதிலும் பண்டிகை நாட்களில் என்றால் சமீபத்தில் வெளியான படங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.
ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அந்த வகையில் ட்ரெண்டிங் ஜோடிகளான ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியை விஜய் டிவி டிஆர்பிக்காக அழைத்து வந்தது. இவர்களுக்கு டஃப் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஜீ தமிழ் யோசித்த ஒரு ஜோடி இறக்கி இருந்தது.
அதாவது சமீபத்தில் நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா சின்னத்திரை நடிகர் முனீஸ்ராஜ் என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இது பற்றி ராஜ்கிரண் ஒரு அறிக்கை விட்டிருந்தார். அதாவது பிரியா எங்களுக்கு வளர்ப்பு மகள். நான் முனீஸ்ராஜை பற்றி விசாரித்தபோது அவர் நல்லவர் இல்லை என்பது தெரிய வந்தது.
சினிமா வாய்ப்புக்காக தான் என் வளர்ப்பு மகளை ஆசை காட்டி திருமணம் செய்துள்ளார். இனிமேல் எனக்கும் அந்த பெண்ணுக்கும் எந்த சொந்தமும் இல்லை. அதேபோல் என் பெயரைச் சொல்லிக் கொண்டு முனீஸ்ராஜ் வாய்ப்பு கேட்டால் யாரும் தர வேண்டாம் என ராஜ்கிரண் கேட்டுக்கொண்டார்.
அந்த அளவுக்கு முனீஸ்ராஜ் மீது மிகுந்த கோபத்துடனும், மனவேதனையுடன் ராஜ்கிரன் இந்த பதிவை போட்டிருந்தார். இந்நிலையில் மிக ரகசியமாக நடந்த இந்த திருமணத்தை உலகறிய ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்தி உள்ளது. மேலும் இந்த திருமணத்தை நடத்தியதற்காக முனீஸ்ராஜ் மற்றும் அவரது மனைவி ஜீ தமிழ் குழுவுக்கு நன்றி தெரிவித்தது.
இந்த திருமணம் இருவரின் ஒப்புதலுடன் நடந்ததால் பலரும் மணமக்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வந்தாலும், இதை ராஜ்கிரண் பார்த்தால் எவ்வளவு மனவேதனைப்படுவார், ஏன் அவரது வயதெரிச்சலை கொட்டிக் கொள்கிறீர்கள் என ஜீ தமிழ் தொலைக்காட்சியை ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள்.