விளம்பர பணத்திற்காக அத்து மீறல், விஜய் டிவியோடு சேர்ந்து சிக்கிய VJS.. வெளியேறினாரா தீபக்?

Bigg Boss 8: எவ்வளவு நேக்காக என்னையும் கோர்த்து விட்டுட்டீங்க என்று வடிவேலு சொல்லுவார். அப்படி ஒரு விஷயத்தை தான் விஜய் சேதுபதிக்கு விஜய் சேனல் செய்திருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 11 வாரங்கள் ஆகிவிட்டது. சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய பஞ்சாயத்து எதுவும் வரவில்லையே என்று இருந்தது.

இப்போதுதான் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் அளவிற்கு பெரிய விஷயம் ஒன்று நடந்திருக்கிறது. விஜய் சேதுபதியோடு சேர்ந்து முக்கிய போட்டியாளர் தீபக் இந்த சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

பைனல் லிஸ்ட் போட்டியாளர்களில் தீபக் கண்டிப்பாக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் டிவியோடு சேர்ந்து சிக்கிய VJS

இந்த நிலையில் இந்த சர்ச்சையால்அவர் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்படுவாரோ என்ற பெரிய சந்தேகமும் எழுந்திருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரைக்கும் விளம்பரங்கள் என்பது அதிகமாக கிடைக்கும். அவர்கள் சாப்பிடும் பொருட்களில் இருந்து உபயோகப்படுத்தும் பொருட்கள் வரை எல்லாமே விளம்பரம் தான்.

அப்படித்தான் சமீபத்தில் டிசம்பர் 14ஆம் தேதி கே ஜி எஸ் என்னும் டைல்ஸ் பள்ளிக்கு விளம்பரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த விளம்பரத்தை படித்து செயல்படுத்தியவர் தீபக்.

இந்த டைல்ஸ் கல்லை ஆலங்குடி டைல்ஸ் கற்களோடு ஒப்பிட்டு விளம்பரம் ஆகி இருக்கிறது.

இதனால் ஆலங்குடி டைல்ஸ் செய்ய உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அத்தனை பேரும் தங்களுடைய தொழிலுக்கு பெரிய பாதகத்தை ஏற்படுத்துவதாக புகார் கொடுத்திருக்கிறார்கள்.

வழக்கறிஞர்களிடம் இது குறித்து பேசப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஆணையரிடமிருந்து தகவல் வந்திருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment