Singappenne: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே தொடரில் விறுவிறுப்பான கதைக்களத்துடன் நடந்து வருகிறது. தான் கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளியில் தெரியக்கூடாது என தற்கொலை செய்ய ஆனந்தி முயற்சி செய்கிறார்.
ஆனால் அது முடியாமல் போக அவரது தோழிகளுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. ஏன் நீ தற்கொலை செய்ய முயற்சி செய்தாய் என கேட்கின்றனர். நிலைகுலைந்து போன ஆனந்தி தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்லி விடுகிறார்.
இதனால் ஆனந்தியின் தோழிகளும் அதிர்ச்சி அடைகின்றனர். மேலும் கர்ப்பத்திற்கான காரணம் யார் என்று தெரியவில்லை என்பதால் அதைத் தேடும் முயற்சியில் இறங்க இருக்கின்றனர். மற்றொருபுறம் மித்ரா எப்படியாவது ஆனந்தி மற்றும் அன்புக்கு கல்யாணம் முடிக்க வேண்டும் என்ற திட்டம் தீட்டுகிறார்.
ஆனந்தியின் கர்ப்பத்தை அறிந்த தோழிகள்
இதனால் ஆனந்தியின் அண்ணன் மற்றும் அவரது மனைவி மூலமாக ஏதாவது பிரச்சனை ஏற்படுத்த முடியுமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அன்புக்கும் இப்போதுதான் ஆனந்தியின் நடவடிக்கை மீது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
ஆகையால் விரைவில் ஆனந்தியின் கர்ப்பத்திற்கான காரணம் யார் என்றும், இதற்கான விடிவுகாலமும் பிறக்க உள்ளது. மேலும் மகேஷ் தான் ஆனந்தியின் கர்ப்பத்திற்கு காரணம் என்று வெளியில் தெரிய வந்தால் பெரும் பிரளயமே வெடிக்கும்.
ஆனந்தி, அன்பு மீது வைத்திருக்கும் காதல் கல்யாணம் வரை கைகூடாமல் போக நேரிடும். இவ்வாறு எதிர்பார்க்காத திருப்பங்கள் அடுத்தடுத்து சிங்க பெண்ணே தொடரில் அரங்கேற இருக்கிறது.