பட வாய்ப்பை நம்பினா வேலைக்காகாது.. விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் கேப்ரில்லா!

விஜய் டிவியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சூப்பர்ஹிட் சீரியலான ஈரமான ரோஜாவே என்ற சீரியல் சமீபத்தில் நிறைவடைந்தது. எனவே இந்த சீரியலின் இரண்டாவது சீசன் துவங்கப்பட உள்ளது என சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.

ஈரமான ரோஜாவே சீசன்2 சீரியலில் கதாநாயகியாக பிக்பாஸ் பிரபலம் கேப்ரில்லா நடிக்க உள்ளார். இவர் பிக்பாஸ் செல்வதற்கு முன்பே விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன் என்ற நடன நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆனது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு நாள் கேப்ரில்லாவின் நடன திறமையை மட்டுமே பார்த்துள்ள நிலையில், அவருடைய நடிப்பை சின்னத்திரையில் முதல்முதலாக பார்க்க உள்ளோம். இவர் ஏற்கனவே வெள்ளித்திரையில் ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இந்நிலையில் ஈரமான ரோஜாவே சீசன்2 சீரியலில் கேப்ரில்லாவுக்கு கதாநாயகனாக, தேன்மொழி சீரியலின் கதாநாயகன் சித்தார்த் நடிக்கப் போவதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளது. இவர் சீரியலில் நடிக்கத் தொடங்குவதற்கு முன்பே விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவான அழகிய தமிழ் மகன் என்ற நிகழ்ச்சியின் பட்டத்தை வென்ற பிரபலமானவர்.

தற்போது ஈரமான ரோஜாவே சீசன்2 சீரியலின் மூலம் இணைய உள்ள சித்தார்த் மற்றும் கேப்ரில்லா இருவரின் கெமிஸ்ட்ரி சீரியலில் ஒர்க்அவுட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அத்துடன் இந்த சீரியலில் இன்னும் யார் யார் நடிக்க உள்ளனர் சீரியலின் கதை போக்கு என்ன என்பதெல்லாம் அடங்கிய ப்ரோமோ விரைவில் வெளியாக உள்ளது.

ஏற்கனவே முத்தழகு என்ற புதிய சீரியல் விஜய் டிவியில் துவங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் ஒரு புது சீரியல் ஆன ஈரமான ரோஜாவே2 சீரியல் ஒளிபரப்பாக உள்ளது ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்துள்ளனர்.