ஊ சொல்றியா பாடலுக்காக நடன இயக்குனர் செய்த தியாகம்.. அடடா என்ன மனுஷன்யா.?

ஆல் தொட்ட பூபதி பாடலுக்கு பிறகு ஒரு முன்னணி நடிகை ஆடி ஒரு ஐட்டம் பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் என்றால் அது புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய ஊ சொல்றியா பாடல் தான். பாடலை அருமையாக பாடிய ஆண்ட்ரியாவுக்காக இந்த பாடலை கேக்க ஆரம்பித்து இந்த பாடலின் வீடியோ வெளியானவுடன் சமந்தாவின் நடன அசைவுகளுக்காக தொடர்ந்து பல முறை பார்க்கும் படி அப்படி ஒரு ஹாட் ஆன நடனத்தை ஆடி இருப்பார்.

அதற்கு முக்கிய காரணமான இந்த பாடலின் நடன இயக்குனரான கணேஷ் ஆச்சார்யாவை பாராட்டியே ஆக வேண்டும். அதுமட்டுமில்லாமல் அவர் இருந்த நிலையில், இந்த பாடலுக்கு இவ்வளவு அருமையாக நடனம் அமைத்து கொடுத்தார் என்பதுதான் ஆச்சர்யமாக உள்ளது. அந்த பாடலுக்காக கணேஷ் ஆச்சார்யா நடனம் சொல்லி தரவேண்டும் என்று அல்லு அர்ஜுன் அவருக்கு போன் செய்து இருக்கிறார். அதற்க்கு கணேஷ் தனக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது இன்னும் 2 நாட்களில்,என்று கூறி அந்த பாடலில் பணிபுரிய மறுத்துவிட்டாராம்.

ஆனால் இந்த படத்தின் தயாரிப்பளார் விடாமல் தொடர்ந்து கணேஷிடம் கேட்டு பார்த்தும், கணேஷ் ஆச்சார்யா அவரின் உடல் நிலையை எடுத்து கூற, இறுதியில் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கு போன் செய்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேதியை மாற்றி அமைக்கக்கோரி கேட்டு இருக்கிறார். அந்த மருத்துவர் ஒப்புக்கொண்ட பின்புதான், கணேஷ் ஆச்சார்யா ஸ்பாட்க்கு கிளம்பி இருக்கிறார்.

இரண்டு நாட்கள் தொடர்ந்து ரிகர்சல் நடைபெற்று இருக்கிறது. அந்த வீடியோக்கள் கூட சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி இருந்தது. பாடலின் இடையே இவர் அல்லு அர்ஜுனுக்கு நடனம் சொல்லி கொடுக்கும் வீடியோக்கள் கூட வெளியாகி வைரலானது. தர லோக்கலாக இறங்கி அடிக்க வேண்டும் என்றுதான் இயக்குனர் அல்லு அர்ஜுனின் கதாபாத்திரத்தை வடிவமைத்து இருப்பார். அதற்கேற்றாற் போல இந்தப் பாடலிலும் அவரின் லோக்கலான உடல் மொழியை கலந்து நடனம் அமைக்கப்பட்டு இருக்கும்.

தமிழில் ஜீவா, ஸ்ரேயா நடித்த ரவுத்திரம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் கணேஷ் ஆச்சார்யா நடித்தும் இருந்தார். இந்தியில் முன்னணி நடன இயக்குனராக இருக்கும் இவர், சில படங்களை அங்கு இயக்கியும் உள்ளார். சிறு வயதில் இருந்தே குண்டாக இருக்கும் கணேஷ் ஆச்சார்யா, ஒரு கட்டத்தில் 200 கிலோ வரை உடல் எடை அதிகரித்தார்.

இதனால் அவர் நடக்க கூட சிரமப்பட்டு முடங்கி போனார். எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு ஒன்றரை வருடத்தில் 85 கிலோ வரை உடல் எடையை குறைத்து மீண்டு வந்தார். அவருக்கு “எனக்கு ரிஸ்க் எடுக்குறது எல்லாம் ரஸ்க் சாப்பிடறது போல ” என்று கூறுவது போன்று, இது போன்ற சவால்களை கடந்து அதில் வெற்றியும் கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.