ஜனனிக்கு வார்னிங் கொடுக்கும் கௌதம்.. பகல் கனவு காணும் குணசேகரன்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன் ஏற்பாடு பண்ணின முதல் ராத்திரியிலிருந்து ஆதிரை, கரிகாலனிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக சில விஷயங்களை சொல்லி பயமுறுத்தி வைத்திருக்கிறார். அதைக் கேட்டதிலிருந்து கரிகாலன் சந்தோசம் இல்லாமல் எதையோ பறி கொடுத்தது போல் இருக்கிறார்.

இருந்தாலும் ஆதிரையை எங்கேயும் விட்டுக் கொடுக்காமல் அவருடைய அன்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக ஜான்சி ராணி, குணசேகரன் வீட்டிற்கு வந்து தடபுடலாக விருந்தை கொடுத்து பரிமாறுகிறார். அதன் பின் அனைவரும் வயிறார சாப்பிட்டதும் கரிகாலன் மற்றும் ஆதிரையை வீட்டுக்கு போகலாம் வாங்க என்று கூப்பிடுகிறார்.

அதற்கு ஆதிரை இப்பொழுது வரவில்லை, அம்மா வந்ததும் பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்ல, அதற்கு குணசேகரன் அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை நீ உங்க வீட்டுக்கு போயிட்டு வா என்று சொல்கிறார். உடனே ஆதிரை கரிகாலனை தந்திரமாக மடக்கி அவர் வாயிலிருந்து நாங்கள் இங்கே இருக்கிறோம் என் மாமியார் வந்ததும் வருகிறோம் என்று ஜான்சிராணி இடம் சொல்ல வைக்கிறார்.

அடுத்ததாக ஜனனி சக்தி இவர்கள் கௌதமை சந்திக்கப் போகிறார்கள். அப்பொழுது ஜனனி என்னாச்சு அது யார் என்று ஏதாவது கண்டுபிடிச்சியா என்று கேட்கிறார். அதற்கு கௌதம் அப்பத்தா சொத்து பிரச்சனை எல்லாம் இதோட மறந்துவிடு. இந்த விஷயத்தில் மேற்கொண்டு எந்த முயற்சியும் செய்ய வேண்டாம் என்று சொல்கிறார்.

அதற்கு ஜனனி ஏன் என்னாச்சு இப்படி சொல்கிறாய் உனக்கு அவர் யார் என்று தெரியுமா? அவங்க என்ன அவ்வளவு பெரிய ஆளா என்று கேட்கிறார். ஆனால் கௌதம் எந்த உண்மையையும் சொல்லாமல் அதெல்லாம் உனக்கு தேவையில்லாதது. அப்பத்தாவின் விஷயத்தில் நீ தலையிட வேண்டாம் என்று எச்சரிக்கை கொடுக்கிறார்.

ஆனால் ஜனனி எதையும் கேட்காமல் அப்படி எல்லாம் என்னால் விட முடியாது. இது அப்பத்தா கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த சொத்து, இது அவர்களுடைய உரிமை அவர்களுக்காக நான் போராடி இந்த சொத்துக்களை அப்பத்தாவிடம் ஒப்படைப்பேன் என்று உறுதியாக சொல்லி கிளம்பி விடுகிறார். ஆக மொத்தத்தில் குணசேகரன் ஆசைப்படும் அப்பத்தாவின் சொத்து அவருக்கு பகல் கனவாக தான் போகப் போகிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →