பொண்டாட்டி நடவடிக்கையால் நிம்மதியை தொலைத்த கோபி.. நியாயம் கேட்டு சென்ற இடத்தில் வாங்கிய பல்ப்

Bhakkiyalakshmi serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது சுவாரசியமான கதை களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. அதாவது பாக்யா, பழனிச்சாமி இருவரும் ஆங்கிலம் கற்று வருகிறார்கள். அப்போது காதலை வெளிப்படுத்த ஆங்கிலத்தில் எப்படி சொல்வது என்பதை எடுத்துக்காட்டாக பழனிச்சாமி பாக்யாவிடம் கூறுகிறார்.

அந்த நேரத்தில் சரியாக கோபி என்ட்ரி கொடுக்க பழனிச்சாமி லவ் யூ என்று பாக்யாவிடம் கூறுகிறார். இதனால் கோபிக்கு ஒரு கணம் நெஞ்சுவலியே வந்து விடுகிறது. இதைத்தொடர்ந்து உனக்கு மானம், ரோஷம் எதுவுமே இல்லையா என பாக்யாவை கண்டுபிடி பேசுகிறார் கோபி. இதெல்லாம் உங்களுக்கு இல்லையா, நான் யார் கூட பேசினா உங்களுக்கு என்ன என்று கடுமையாக திட்டுகிறார் பாக்யா.

மேலும் இதற்கு இப்போதே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று யோசித்த கோபி நேரடியாக பழனிச்சாமி வீட்டுக்கு செல்கிறார். அங்கு பழனிச்சாமி அம்மாவிடம் உங்கள் மகன் ஒரு பெண்ணின் பின்னால் சுற்றி வருகிறார் என்று கூறுகிறார். இவ்வளவு வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாத தனது மகன் ஒருவரின் பின்னால் சுற்றுவதை கேட்டு பழனிச்சாமி அம்மா மகிழ்ச்சி அடைகிறார்.

அதோடு மட்டுமல்லாமல் பழனிச்சாமியின் மனசு மாறுவதற்குள் கல்யாணம் முடித்து விட வேண்டும் என்று நேரடியாகவே கோபியிடம் கூறுகிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கோபி, என்னுடைய மனைவி பின்னால் தான் பழனிச்சாமி சுற்றுகிறார் என கூறுகிறார். உங்க பொண்டாட்டி யாரு என்று கேட்டவுடன் பாக்யா என்று தெரிய வருகிறது.

ஆனாலும் தனது மகன் மீது நம்பிக்கை வைத்துள்ள பழனிச்சாமி அம்மா ஒரு வழியாக கோபியை பேசி அனுப்பி வைக்கிறார். இப்போது கோபியின் மைண்ட் வாய்ஸ் தன்னுடைய ராஜதந்திரங்கள் அனைத்துமே வீணாகி வருகிறதே என்பதுதான். மேலும் பழனிச்சாமி வீட்டுக்கு வந்தவுடன் கோபி வந்த விஷயத்தை அவரது அம்மா கூறுகிறார்.

அப்போது அம்மா தயங்கி தயங்கி பேச, பழனிச்சாமி என்னவாக இருந்தாலும் சொல்லுங்க அம்மா என்று கூறுகிறார். கோபி தவறாக நினைக்கிறார் என்பதை தெரிந்த பழனிச்சாமி , பாக்யாவும் நானும் நட்பாக தான் பழகி வருகிறோம் என்பதை அவரின் அம்மாவிடம் பழனிச்சாமி தெளிவுபடுத்தி உள்ளார். கோபிக்கு தான் நாளுக்கு நாள் சந்தேகம் அதிகமாகி பித்து பிடித்தவர் போல் ஆக இருக்கிறார்.