Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், கடந்த வாரம் முழுவதும் விஜய் மற்றும் காவிரி தனியாக சந்தித்து பேசி அவர்களுடைய அன்பை கொட்டுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருந்தது. இந்த காட்சிகள் எல்லாம் மனதிற்கு நிறைவாக இருக்கிறது என்று ரசிகர்களும் சந்தோஷப்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் எல்லா சந்தோஷத்தையும் முடித்துவிட்டு காவேரி வீட்டிற்கு திரும்பிய நிலையில் எதிர்பாராத பல விஷயங்கள் நடைபெற போகிறது. அதாவது ஏற்கனவே சாரதாவிற்கு விஜய்யை பிடிக்கவில்லை. விஜய்யும் காவிரியும் சேரக்கூடாது என்று நினைத்து தனியாக பிரித்து வைத்திருக்கிறார்.
இப்பொழுது வெண்ணிலா வந்த பிரச்சனை பண்ணி ஊர் முழுவதும் அவமானப்பட்டு விட்டதாக சாரதா பயங்கர கோபத்தில் இருக்கிறார். அத்துடன் வீட்டின் ஓனரும் வந்து சாரதாவிடம் வீட்டை நீங்கள் காலி பண்ணி வேற வீட்டுக்கு போய் விடுங்கள் என்று சொல்லிவிடுகிறார்.
இதனால் ஒட்டுமொத்த கோபமும் விஜய் மீது திரும்பியதால் காவிரியும் விஜயும் விவாகரத்து பண்ண வேண்டும் என்று சாரதா முடிவு எடுத்து விட்டார். இதனால் சந்தோஷமாக விஜய் உடன் இருந்து விட்டு வீட்டுக்கு திரும்பும் காவேரி இடம் சாரதா விவாதத்தைப் பற்றி சொல்லி தலையில் பெரிய குண்டை தூக்கி போடப் போறார்.
ஆனால் கலகம் பிறந்தால் தான் வழி பிறக்கும் என்பதற்கு ஏற்ப சாரதா விவாகரத்து பற்றி பேசும் பொழுது தான் காவேரி, விஜயுடன் சேர்ந்து வாழ போவார். அத்துடன் வெண்ணிலாவின் சாப்டர் க்ளோஸ் ஆகப் போகிறது என்பதற்கு ஏற்ப ராகினி பசுபதி போட்ட பிளான் படி திருட்டு கல்யாணம் பண்ணுவதற்கு கோவிலில் ஏற்பாடு பண்ணுகிறார்கள்.
ஆனால் விஜய் நிச்சயம் இந்த ஏற்பாட்டின் மூலம் ராகினி பசுபதிக்கு பதிலடி கொடுத்து வெண்ணிலாவின் வாழ்க்கையை சரி செய்து வெண்ணிலாவை மாமாவோட சேர்த்து அனுப்பி வைத்து விடுவார்.
மேலும் வெண்ணிலாவின் ட்ராக் இதோடு முடியப்போகிறது என்பதற்கு ஏற்ப வெண்ணிலா கேரக்டரில் நடித்து வரும் வைசாலி நிஜ வாழ்க்கையில் ஐந்து மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதனால் இனி தொடர்ந்து நடிக்க முடியாத சூழ்நிலையால் வெண்ணிலா கதை முடிவுக்கு வந்துவிடும்.