பாக்யா ஜோலி முடிஞ்சு.. மகன் எழிலுக்கு முன் புது மாப்பிள்ளையாக மாறும் கோபி!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவை விவாகரத்து செய்ய துணிந்த கோபி, தற்போது பாக்யாவிடம் எதற்காக கையெழுத்து கேட்கிறேன் என்பதை சொல்லாமல் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கி விடுகிறான்.

அந்த சமயத்தில் கூட கணவரை முழுமையாக நம்பும் பாக்யா, கோபி பக்கம் பக்கமாக கேட்கும் ஒவ்வொரு கையெழுத்தையும் கண்மூடித்தனமாக நம்பி தன்னுடைய கையெழுத்தை விவாகரத்து பத்திரத்தில் போட்டு விடுகிறாள்.

அதன்பிறகு கோபி, ‘எதற்காக கையெழுத்து போட வேண்டும் என ஏன் கேட்கவில்லை’ என்று கேட்க, அதற்கு பாக்யா, ‘நீங்கள் எதை செய்தாலும் என்னுடைய நன்மைக்காக தான் செய்வீர்கள்’ என்று கோபியை குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறார். இருப்பினும் அதையெல்லாம் அசால்டாக தூக்கி எறிந்த கோபி, தனக்கு வேலை இவ்வளவு சீக்கிரமாக காரியம் ஆகிவிட்டது என்பதை நினைத்து மனதிற்குள் சந்தோசப்படுகிறான்.

அத்துடன் கோபியின் அப்பா, வீட்டில் இருப்பவர்களிடம் கோபியின் தவறான நடத்தையை பற்றி தெரிவிக்க முயற்சி செய்தாலும் அவரால் சொல்ல முடியவில்லை. பக்கவாதம் ஏற்பட்டதால் ஒரு பக்கம் முழுவதும் செயலிழந்த போன கோபியின் அப்பாவிற்கு பேச்சு வரவில்லை.

இருப்பினும் கோபியை பார்க்கும்போதெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு கோபத்தில் கத்துகிறார். இதனால் வீட்டில் இருப்பவர்களுக்கும் கோபியின் அம்மா மற்றும் பாக்யாவிற்கும் சந்தேகம் ஏற்படுகிறது. எனவே இனிவரும் நாட்களில் பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு கோபி, ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அவர்களது வீட்டிலேயே வாழ போகிறான்.

தனக்கு துரோகம் செய்த கோபியை சாகும்வரை மன்னிக்கப் போவதில்லை என்ற வைராக்கியத்துடன் தன்னுடைய மாமனார், மாமியார் பிள்ளைகளுடன் பாக்யா தனித்து வாழ போகிறாள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →