முதல்முறையாக ராதிகா எடுத்த நல்ல முடிவு.. டம்மியாக நிற்கும் கோபி, அடுத்து பாக்யா கொடுக்கப் போகும் தண்டனை

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகா போட்ட பிளான் படி கோபி குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஒன்று சேர்ந்து ஒரு நாள் முழுவதும் நேரத்தை செலவழித்து வருகிறார். அத்துடன் இனியாவுடன் பழகி ஒரு நல்ல புரிதலை ஏற்படுத்தும் விதமாக ராதிகா, இனியாவுக்கு தேவையான விஷயங்களை பார்த்து பார்த்து பண்ணுகிறார்.

இனியாவும் ராதிகாவை புரிந்து கொண்டு மயு கூட சேர்ந்து பழக ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் ஒட்டுமொத்த குடும்பமும் சந்தோஷமாக இருக்கும் தருணத்தில் கூட ஈஸ்வரி கொஞ்சம் கூட திருந்தாமல் ராதிகாவை கஷ்டப்படுத்தும் படி பேசி வருகிறார். இருந்தாலும் ராதிகா எதையும் கண்டு கொள்ளாமல் யாருக்கு என்ன பிடிக்குமோ அந்த சாப்பாடுகளை எல்லாம் ஆர்டர் பண்ணி குடும்பத்தில் இருப்பவர்கள் ஒவ்வொருவரையும் சந்தோஷமாக வைத்து விடுகிறார்.

பிறகு வீட்டிற்கு திரும்பிய நிலையில் அனைவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் ஈஸ்வரி, கோபியுடன் இதே மாதிரி நம் அடிக்கடி வெளியே போக வேண்டும். அப்பொழுது தான் மனசுக்கு ஒரு நிறைவான வாழ்க்கை கிடைக்கும் என்று சொல்கிறார். உடனே கோபி அதெல்லாம் ஒன்னும் பிரச்சனையே இல்லை அம்மா, நாம் அடிக்கடி போகலாம் என்று சொல்கிறார்.

அதற்கு ஈஸ்வரி, ஆனால் இனி போகும் பொழுது நம் குடும்பத்தில் இருப்பவர்களுடன் மட்டும் தான் போக வேண்டும் புரியுதா கோபி என்று கேட்கிறார். அதாவது ராதிகா நம் குடும்பம் கிடையாது ராதிகா மயூ தவிர நாம் அனைவரும் சேர்ந்து போக வேண்டும் என்று ஈஸ்வரி கூறுகிறார். உடனே கோபி, இன்று வெளியே போனதற்கு முக்கிய காரணமே ராதிகா தான். ராதிகா தான் இனியா கொஞ்சம் அப்செட் ஆக இருக்கிறாள் என்று தெரிந்து இந்த ஏற்பாடுகள் எல்லாத்தையும் பண்ணி இருக்கிறார் என கூறுகிறார்.

இதையெல்லாம் கேட்ட ராதிகா, கோபியிடம் பாக்கியா நமக்கு கொடுத்த கெடு நாளையுடன் முடியப்போகிறது. அதனால் நாம் மூன்று பேரும் நாளைக்கு இந்த வீட்டை விட்டு கிளம்ப வேண்டிய நேரம் வந்து விட்டாச்சு என்று சொல்கிறார். உடனே கோபி, பாக்கியா நமக்கு ஒண்ணும் கெடு கொடுக்கவில்லையே என்று கேட்கிறார். அதற்கு பாக்யா வந்து உங்களுக்கு உடம்பு சரியாகும் வரை இங்கே இருக்க வேண்டும் என்று உங்க அம்மா ஆசைப்பட்டாங்க. இப்பொழுது உங்களுக்கு உடம்பும் சரியாகி விட்டது பத்து நாளும் சந்தோசமாக உங்க அம்மா கூட பிள்ளைகளுடன் இருந்து விட்டீங்க.

போதும் அதுவரை நீங்கள் இருந்தது தயவு செய்து உங்க குடும்பத்தை கூட்டிட்டு கிளம்புங்க என்று கரராக பாக்யா பேசி விடுகிறார். இதனால் கோபி என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அந்த சூழ்நிலையிலும் ஈஸ்வரி மற்றும் இனியா, கோபியிடம் இந்த வீட்டை விட்டு போக வேண்டாம். நீ இருந்தால் தான் இந்த குடும்பமும் நாங்களும் சந்தோசமாக இருப்போம் என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனை பார்த்த ராதிகா எதுவும் சொல்லாமல் ரூம்குள் போய்விடுகிறார். ஆனால் மறுநாள் வீட்டை விட்டு போவது ராதிகா மற்றும் மயுவாகத் தான் இருக்கிறார்கள். இனியாவிடம் நீ ஆசைப்பட்ட மாதிரி உங்க அப்பாவை திருப்பி இந்த வீட்டிலேயே விட்டுவிட்டேன். சந்தோஷமாக இருங்கள் என்று கிளம்பி விடுகிறார்கள். அந்த வகையில் ராதிகா முதல்முறையாக அவருடைய வாழ்க்கையில் நல்ல காரியம் செய்திருக்கிறார் என்றால் கோபியை விட்டுட்டு போக வேண்டும் என்று நினைத்தது தான்.

இதனை அடுத்து எதுவும் சொல்லாமல் டம்மியாக நின்னு வேடிக்கை பார்க்கும் கோபிக்கு அடுத்து பாக்யா கொடுக்கும் தண்டனை. என்னுடைய வாழ்க்கையிலும் இந்த குடும்பத்திலும் எப்பொழுதுமே உங்களுக்கு இடம் கிடையாது. அதே நேரத்தில் உங்க அம்மா மற்றும் பிள்ளைகளை பார்த்துட்டு போக வேண்டும் என்றால் தாராளமாக நீங்க வந்துட்டு போகலாம்.

ஆனால் அதற்காக இந்த வீட்டிலேயே நீங்கள் இருந்திட முடியாது என்று கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறையாக பதிலடி கொடுக்கப் போகிறார். கடைசியில் இரண்டு பொண்டாட்டியும் இல்லாமல் நடுத்தெருவில் இருக்கும் நிலைமைதான் கோபிக்கு கிடைக்கப் போகும் மிகப்பெரிய தண்டனையாக இருக்கப் போகிறது.

Leave a Comment