அந்த விஷயத்தில் பைத்தியம் முத்தின கோபி.. பேரப்பிள்ளை எடுக்கிற வயசுல இதெல்லாம் தேவையா கோபி?

விஜய் டிவியின் பிரைன் டைம் சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவின் கணவர் கோபி, விவாகரத்து செய்துகொண்ட கல்லூரி காதலி ராதிகா உடன் சேர்ந்து வாழ முடிவெடுத்துள்ளார். இதனால் பாக்யாவிடம் விவாகரத்து நோட்டீஸில் கையெழுத்து வாங்குவதற்காக வீட்டிற்கு வருகிறார்.

அப்போது சுமங்கலி பூஜை நடத்தப்படுகிறது. அதில் நடைபெறும் சடங்குகளில் கலந்து கொள்ளும் கோபி, மனைவியின் பாக்யாவின் தாலிக்கு குங்குமம் வைக்கிறார். இவ்வாறு புனிதமாக இருக்கும் திருமண பந்தத்தை எப்படி உடைத்து ராதிகாவை திருமணம் செய்து கொள்ளப் போவது என கோபி குழம்பித் தவிக்கிறார்.

அதன் பிறகு அப்பாவின் ரூமிற்கு செல்லும் கோபி, அவருடைய அப்பா கோபியை கண்டமேனிக்கு திட்டுவது போல் தனக்குத் தானே சிந்திக்கிறார். தன்னுடைய கள்ளக்காதல் அப்பாவிற்கு ஏற்கனவே தெரியும் என்பதால் அதை பாக்யாவிடம் சொல்லி விடுவாரோ என்ற பயத்தில் ஏற்கனவே கோபி சொந்த வீட்டிலேயே ஒளிந்து கொண்டிருக்கிறார்.

இருப்பினும் ராதிகாவின் மேல் கோபிக்கு கண்மூடித்தனமாக காதல் இருப்பதால், என்ன செய்வது என தெரியாமல் கட்டிய மனைவிக்கும் காதலிக்கும் இடையே திண்டாடிக் கொண்டிருக்கிறார்.

எனவே இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்கள் பாக்யாவிற்கு தங்களுடைய ஆதரவை தெரிவிப்பதால் ‘கோபியின் கள்ளக்காதல் முத்தி தனக்குத்தானே யோசிச்சுக்கிட்டே இருப்பதால் கூடிய சீக்கிரம் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு சென்று விடுவார் போல’ என கிண்டல் அடிக்கின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →