மண்டபத்திற்கு ஜோடியாக வந்த கோபி-ராதிகா.. பரபரப்பை ஏற்படுத்திய பாக்யா

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்து ஆன கையோடு புது மாப்பிள்ளையாக மாறிய கோபி, குடும்பமே எதிர்த்தாலும் ராதிகாவை திருமணம் செய்துகொள்ளும் முடிவில் அழுத்தமாக இருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாக்யா புருஷனுடைய கல்யாணத்துக்கு சமைத்துக் கொடுக்கும் சமையல் ஆர்டரை எடுத்து அதை சிறப்பாக நடத்திக் கொடுக்கவேண்டும் என்ற பொறுப்புடன் பரபரப்பாக வேலைகளை பார்க்கிறார்.

அதே மண்டபத்தில்தான் கோபி-ராதிகா இருவரின் திருமணம் நடக்கப்போகிறது என்பதை கூட தெரியாமல் பாக்யா, இந்த சீரியலில் அப்பாவியாக இருப்பதைக் கூட ஏற்றுக்கொண்ட ரசிகர்கள், ஏமாளியாக இருக்கக்கூடாது என எண்ணுகின்றனர்.

மேலும் ராதிகாவுடன் ஜோடியாக மண்டபத்திற்கு வந்த கோபி, அங்கு பாக்யா மாடியில் நின்று கொண்டு தன்னுடைய குடும்பத்தினரிடம் தொலைபேசியில் பேசும்போது, அந்த குரலை கேட்டு விடுகிறார். உடனே ‘எங்கு பார்த்தாலும் இவளுடைய குரலாக தான் இருக்கிறது’ என்று அந்த நேரத்திலும் பாக்யாவை கரித்து கொட்டுகிறார்.

இந்த திருமணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று சாக கூட துணிந்த கோபியின் அப்பா, மண்டபத்திற்கு வேகமக விரைகிறார். மறுபுறம் கோபியின் இரு மகன்கள் மற்றும் அம்மா இருவருக்கும் இன்று கோபிக்கு திருமணம் என்ற விஷயம் கூட தெரியாமல் இருக்கின்றனர்.

ஆனால் பாக்யாவிற்கு ராதிகாவின் மகள் மூலம் ராதிகா-கோபி இருவருக்கும் இதை மண்டபத்தில் தான் திருமணம் நடக்கப்போகிறது என்ற விஷயம் தெரிகிறது. இதைக்கேட்டதும் ஆடிப்போன பாக்யா, ஒருகட்டத்தில் விவாகரத்து ஆன கணவருக்கு திருமணம் நடந்தால் நமக்கென்ன என்று மனதைத் தேற்றிக்கொண்டு சமையல் ஆர்டரை சிறப்பாக செய்து கொடுக்க வேண்டும் என்று, தன்னுடைய வாழ்க்கைக்கு எது முக்கியமோ அதில் கவனம் செலுத்தப் போகிறார்.

என்னதான் கதையா இருந்தாலும், கல்யாண வயசுல பிள்ளைங்க இருக்கற அப்பனுக்கும், வயசுக்கு வர வயசுல பிள்ளை இருக்கற அம்மாவுக்குமா கல்யாணம் பண்ணி வைப்பீங்க. ஒரு ஒழுக்கம் வேண்டாமா? என்றும், கலாசார சீர்கேடு இந்த நாடகம் என்றெல்லாம் நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் பாக்கியலட்சுமி சீரியலை கிழித்து தொங்க விடுகின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →