Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா அட்வான்ஸ் பணத்தை கொடுத்த கையோடு மீதமுள்ள பணத்தை கொடுத்து பார்த்த கடையை வாடகைக்கு எடுத்துக் கொண்டார். வீட்டில் வந்து சொல்லிய நிலையில் ஈஸ்வரி வானத்துக்கும் பூமிக்கும் குதித்து பாக்யாவை திட்ட ஆரம்பித்து விடுகிறார்.
அத்துடன் செழியன் மற்றும் எழிலை கூப்பிட்டு பாக்கியாவை பற்றி கம்பளைண்ட் சொல்கிறார். உடனே இவர்களும் பாக்யாவிற்கு அட்வைஸ் கொடுக்கும் விதமாக இப்போ அவசர அவசரமாக பிசினஸ் பண்ண வேண்டிய அவசியம் என்ன என்று செழியன் கேட்கிறார்.
அதே மாதிரி எழில் உன் ஆசைப்படி நீ பிசினஸ் பண்ணு, ஆனால் சின்னக் கடையை ஏன் நீ எடுத்து பண்ண வேண்டும். பொறுமையாக பார்த்தால் நல்ல பெரிய கடையை பார்த்து பிசினஸ் பண்ணலாம் என சொல்கிறார். அந்த வகையில் பாக்யா எடுத்து வைக்கும் புது பிசினஸில் ஒட்டுமொத்த குடும்பமும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால் பாக்யா, என் கையில் என்ன பணம் இருக்கிறதோ அதை வைத்து நான் பிசினஸ் துவங்குகிறேன். என்னை என் வழியிலே போக விடுங்க என்று சொல்லி பார்த்த கடைக்கு திரும்ப போகிறார். பிறகு அந்த கடை கொஞ்சம் சரி பண்ண வேண்டும் என்பதற்காக வேலை ஆட்களை வைத்து சரி பண்ணுகிறார்.
கூடவே பாக்கியம் மற்றும் செல்வியும் எல்லா வேலைகளையும் பார்க்கிறார். அப்பொழுது கோபி அந்த வழியாக போகும்பொழுது பாக்கியம் படும் கஷ்டத்தை பார்த்து பீல் பண்ணுகிறார். உடனே தனியாக இருந்த பாக்யாவிடம் கோபி ஓவர் கரிசனம் காட்டும் விதமாக உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேளு.
உன்னை அந்த நிலைமையில் பார்த்ததும் எனக்கு ரொம்ப கஷ்டமாக போய்விட்டது. நீ தாராளமாக பிசினஸ் பண்ணு ஆனால் உனக்கு உதவி பண்ணுவதற்கு நான் இருக்கேன் என்பதை மறந்து விடாதே என்று சொல்லிவிடுகிறார். உடனே பாக்கியாவும் நீங்கள் கேட்டது எனக்கு போதும் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.
அடுத்ததாக ஹனிமூன் போயிட்டு வந்த இனியாவை சுதாகர் வீட்டில் போய் பார்ப்பதற்கு பாக்யாவின் ஒட்டுமொத்த குடும்பமும் போகிறார்கள். அங்கே இனியாவை பார்த்து பேசிய நிலையில் எல்லோரும் முன்னாடியும் பாக்கியம் புதுசாக ஒரு கடையை எடுத்து நடத்துகிறேன். அதுதான் இனிமேல் என்னுடைய ஹோட்டல் என்று சொல்கிறார்.
உடனே எல்லோரும் போன பொழுது சுதாகர், பாக்யாவை பார்த்து இனியாவின் அம்மா ஒரு கையேந்தி ஹோட்டலை நடத்துகிறார் என்று சொன்னால் எல்லோரும் ஏளனமாக பேசுவார்கள். இதெல்லாம் தேவையா சம்மந்தி என்று கேட்கிறார், அதற்கு பாக்யா பதிலடி கொடுக்கும் விதமாக அவர்களிடம் சொல்லுங்க என்னுடைய சம்மந்தி இரண்டு மூன்று ஹோட்டலுக்கு ஓனராக இருந்தாங்க.
ஆனால் அதையெல்லாம் தட்டிப்பறித்து கொண்டேன் என்று உண்மையை சொல்லுங்க என சுதாகருக்கு சரியான பதிலை கொடுத்து விட்டார். ஆனால் இவ்வளவு விஷயமும் நடந்த பிறகு எல்லோருக்கும் எல்லா உண்மையும் தெரியும், ஆனால் இனியா மட்டும் எதுவுமே தெரியாதபோல் மக்காக இருப்பது தான் வேடிக்கையாக இருக்கிறது.