விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்துக்குப் பிறகு ராதிகாவை திருமணம் செய்து கொள்ளும் முடிவில் மண மேடைக்கு வரும் கோபி, கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் கூத்தடிக்கிறார். தட்டிக் கேட்க வந்த அப்பாவையும் அசிங்கப்படுத்தி அனுப்பினார் .
அதன் பிறகு ராதிகாவிடம் தன்னை ஹீரோ ரேஞ்சுக்கு காலரை எல்லாம் தூக்கி விட்டு கெத்து காட்டுகிறார். இருப்பினும் ராதிகா மணமேடையில் பாக்யாவின் குடும்பத்தினரால் அவமான பட்டதால் வருத்தத்துடன் இருக்கிறார்.
இதைப் பார்க்க முடியாத கோபி, கோபத்தில் அங்கு சமையல் ஆர்டரை எடுத்து சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் பாக்யாவை சீண்டி பார்க்கிறார். பொறுமையிழந்த பாக்யா, ‘முடிந்ததை எல்லாம் பேசுவதற்கு நேரம் எனக்கு இல்லை.
என்னை நம்பியவர்களை கை விடும் பழக்கம் எனக்கில்லை. தலைக்கு மேல் வேலை இருக்கிறது. பொறுப்புக்களை கையில் எடுத்தால் அதை சிறப்பாக முடிக்க வேண்டும் என்பதுதான் இப்பொழுது எனது மனதில் ஓடுகிறது. விவாகரத்து ஆன பிறகு உங்களுக்கு கல்யாணம் நடந்தா என்ன! நடக்காட்டினா என்ன!
பொழச்சி போகட்டும் என்றுதான் பொம்பளைங்க சில விஷயத்தை சொல்லாமல் இருக்கிறார்கள். அப்படித்தான் நானும்’ என்று கோபியின் ஓவர் ஆட்டத்தை அடக்கினார். இதன்பிறகு கோபி-ராதிகா இருவரின் திருமணம் மனைவி பாக்யா கண்முன்னே நடக்கப்போகிறது.
என்னதான் தைரியமாக பாக்யா பேசி விட்டாலும், கணவரின் திருமணத்தை பார்க்கும் அவலநிலை அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. இப்படி தவறான உதாரணத்தை சமுதாயத்திற்கு எடுத்துரைக்கும் பாக்கியலட்சுமி சீரியலை சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கிழித்து தொங்க விடுகின்றனர்.