பாக்யாவை முட்டாளாக்கி ஏமாற்றிய கோபி சம்பந்தி.. அம்மாவுக்காக இனியா எடுக்கப் போகும் முடிவு

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியாவின் ஹோட்டலை அபகரிக்க நினைத்த சுதாகர், இனியா மூலம் காய் நகர்த்தினார். அந்த வகையில் கோபி மற்றும் ஈஸ்வரி சேர்ந்து செண்டிமெண்ட் ட்ராமா போட்டு இனியாவை நம்ப வைத்து சுதாகர் விரித்த வலையில் சிக்க வைத்து விட்டார்கள்.

இதனால் இனியாவும் கோபி எடுத்த முடிவுக்கு சரி என்று சொல்லிய நிலையில் சுதாகர் பையனை கல்யாணம் பண்ணுவதற்கு சம்மதம் கொடுத்து விட்டார். ஆனால் கல்யாணம் நடப்பதற்கு முன் பாக்யாவை சந்தித்து பேசிய சுதாகர், பாக்கியம் நடத்தும் ஹோட்டல் பெயரை மாற்றுவதற்கு டீல் பேசினார்.

ஆரம்பத்தில் யோசித்த பாக்கியம் இனியாவிற்காக ஓகே என்று சொல்லி பத்திரத்தை சரியாக படித்துப் பார்க்காமல் ஈஸ்வரி ரெஸ்டாரண்டின் பெயரை மாற்றுவதற்கு கையெழுத்து போட்டு விட்டார். அந்த வகையில் சுதாகர் மகனுடன் இனியாவுக்கு கல்யாணம் நடந்து முடிந்த கையுடன் ஹோட்டலுக்கு போன சுதாகர், பாக்கியவிடம் சொன்னது என்னவென்றால் இனி இந்த ரெஸ்டாரன்ட் எஸ் எஸ் என்ற பெயர் கீழ் தான் நடக்கும்.

அத்துடன் இனியாவிற்கு வரதட்சணையாக இந்த ஹோட்டல் நீங்கள் எனக்கு எழுதிக் கொடுத்ததாக இருக்கிறது என்று சொல்லி பாக்யாவை முட்டாளாக்கி வெளியே அனுப்பி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த பாக்கியம் வீட்டிற்கு வந்து கோபியிடம் உங்க சம்மந்தி என்னை ஏமாற்றி அந்த ஹோட்டலை அபகரித்து விட்டார்.

நான் பார்த்து பார்த்து கொண்டு வந்த என்னுடைய ஹோட்டலை என்னிடமிருந்து பிடுங்கி விட்டது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்ற புலம்புகிறார். ஆனால் ஈஸ்வரிக்கும் கோபிக்கும் இது பெரிய பிரச்சினையாகவே இருக்காது. ஏனென்றால் அவர்களை பொறுத்தவரை இந்த ஹோட்டல் இருக்க போய் தான் பாக்கியம் யார் பேச்சையும் கேட்காமல் இஷ்டத்துக்கு முடிவெடுக்கிறார் என்று நினைப்பு இருக்கிறது.

அதனால் பாக்கிய தற்போது ஹோட்டல் இல்லாமல் அவஸ்தைப்பட போகிறார் என்ற நினைப்பில் அவர்கள் பாக்கியாவை நினைத்து சந்தோஷ தான் படுவார்கள். இதையெல்லாம் கேள்விப்பட்ட இனிய நிச்சயம் பாக்யாவிற்காக அந்த ஹோட்டலை வாங்கி கொடுப்பதற்கு அதிரடியாக களத்தில் இறங்குவார். அந்த வகையில் மறுபடியும் ஈஸ்வரி ரெஸ்டாரண்ட் பாக்கியா கையில் கிடைக்கும் படி இனியா காய் நகர்த்த போகிறார்.