அடிமைகள் சிறுத்தையாக மாறும் சவால்.. குணசேகரனுக்கு விழும் பெரிய அடி

ஆதிரையின் திருமணத்தை ஜவ்வு மாதிரி இழுத்துக் கொண்டிருந்த எதிர்நீச்சல் சீரியல் அதற்கு எண்டு கார்டாக வருகிற சண்டே கல்யாண சவாலாக வர இருக்கிறது. இதன் மூலம் தான் அந்த வீட்டின் மருமகள் குணசேகரனுக்கு எதிராக தைரியமாக போராட இருக்கிறார்கள். ஆனாலும் இது சும்மா வாய் சவடலாக இல்லாமல் செயலில் செய்து காட்டினால் உண்மையாகவே இந்த சீரியலுக்கு உயிர் வந்த மாதிரி இருக்கும்.

பல மாதங்களாக ஆதிரையின் நிச்சயதார்த்தத்தை வைத்து கதை நகர்ந்து வந்த நிலையில் குணசேகரன் செய்த தில்லு முல்லால் தற்போது இந்த நிச்சயதார்த்தம் நின்றுவிட்டது. அதனால் நேரடியாகவே இதை திருமணமாக மாற்ற வேண்டும் என்று மருமகள்கள் முடிவோடு இருக்கிறார்கள். ஆனால் குணசேகரன் ஆதிரைக்கு வேறொரு மாப்பிள்ளையை காட்டி நீ அருணை மறந்திடு இவர தான் கல்யாணம் பண்ணனும் அதற்கு தயாராக இரு என்று சொல்கிறார்.

அதற்கு ரேணுகா என்னது வேற மாப்பிள்ளையே பார்த்திருக்கிறாரா யார கல்யாணம் பண்ணனும் பண்ணக்கூடாதுன்னு கட்டளை போட இவர் யாரு என்று அவருடைய தோரணையில் பேசுகிறார். உடனே ஜனனி இவர் சொல்வதை கேட்டுட்டு அமைதியாக இருக்க நாம் ஒன்றும் அடிமைகள் இல்லை சீறிப் பாகிற சிறுத்தைகள் என்று காட்டுவோம் என்று வீர வசனமாக பேசுகிறார்.

அடுத்ததாக நம்ம நந்தினி இந்த திருமண சவாலில் நாம் யார் நம்முடைய பலம் என்ன என்று கண்டிப்பாக காட்டவேண்டும் என்று சொல்லி ஆதிரை நீ ஒன்றும் கவலைப்படாதே என்று கூறுகிறார். இவர்கள் இப்படி பேசுவதை கேட்க நன்றாக தான் இருக்கிறது. அந்த அளவுக்கு கொஞ்சம் செயலிலும் காட்டினால் மிகப் பரபரப்பாக போகும்.

இதை பார்க்கும் பொழுது ஆதிரையின் நிச்சயதார்த்தம் நின்று போனதால் அந்த வீட்டின் மருமகள்கள் நேரடியாக திருமணத்தை நடத்தி வைக்கப் போகிறார்கள். அதன்மூலம் இவர்கள் ஒவ்வொருவரும் குணசேகரனை மதிக்காமல் இவர்களுக்கு தோன்றும் விஷயங்களை தைரியமாக செய்து சொந்தக்காலில் நின்று வாழ்க்கையில் ஜெயிக்கப் போகிறார்கள்.

இதை வைத்து தான் இனி வரும் எபிசோடுகள் பரபரப்பாகவும் ரசிகர்கள் எதிர்பார்த்த படியும் கதை அமையப்போகிறது என்பதை நினைக்கும் போது இந்த சீரியலை பார்ப்பதற்கு ஆர்வம் இன்னும் அதிகமாக இருக்கிறது. அதனால் இனி மேல் குணசேகரனுக்கு விழும் ஒவ்வொரு அடியும் மரண அடியாகத்தான் இருக்கப் போகிறது.