Ethir Neechal Serial: குணசேகரன் இல்லாத எதிர்நீச்சல் தொடரை பார்க்க ரசிகர்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும் சற்று சுவாரசியமாக இயக்குனர் இந்த தொடரை எடுத்துச் சென்று இருக்கிறார். அந்த வகையில் ஜீவானந்தத்தின் மகளை குணசேகரன் வீட்டுக்கு நந்தினி அழைத்து வருகிறார். உடனே அவரது மாமியார் யார் இந்த பொண்ணு எதற்கு அழைத்து வருகிறாய் என சண்டையிடுகிறார்.
அதன் பிறகு ஒரு சமாதான முடிவுக்கு வந்து 15 நாட்கள் மட்டுமே இந்த பெண் வீட்டில் இருக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார். மேலும் அதற்கு சம்மதித்து வீட்டுக்குள் அழைத்து வருகிறார். மேலும் பட்டம்மாள், ரேணுகா, ஈஸ்வரி எல்லோரும் அமர்ந்திருக்கும் போது இந்த பெண் யார் என்று நந்தினி இடம் கேட்கிறார்கள்.
நம்ம எல்லோருக்குமே வேண்டியபட்டவரின் மகள் தான் என்று கூறுகிறார். இவர்கள் பேசுவதை கரிகாலன் ஜன்னல் ஓரமாக நின்று கேட்டு விடுகிறார். மற்றொருபுறம் அண்ணன் லெட்டர் எழுதி வைத்து காணாமல் போய்விட்டார் என்ற பரிதவிப்பில் ஞானம் மற்றும் கதிர் இருவரும் குணசேகரனை தேடி அலைகிறார்கள்.
அப்போது ஒரு சாமியார் எடக்கு முடக்கான விஷயங்களை பேசும்போது திடீரென கோபம் ஏற்பட்டு ஞானம் புறப்படுகிறார். அப்போது உன் அண்ணன் குணசேகரனை பார்க்கணுமா வேண்டாமா என்று கேட்கிறார். இதனால் கதிர் மற்றும் ஞானம் இருவரும் ஒரு கணம் ஆடிப் போய் விடுகிறார்கள்.
ஆகையால் இனி குணசேகரன் எங்க இருக்கிறார் என்பதை தேடுவது போன்ற கதைகளத்தை தான் இயக்குனர் கொண்டு வர இருக்கிறார். மேலும் ஏற்கனவே குணசேகரனுக்கு அண்ணன் ஒருவர் இருக்கிறார் என்பது போன்ற ஒரு சின்ன துப்பும் கொடுத்திருக்கிறார்கள். ஆகையால் ஆதி குணசேகரனை தாண்டிய ஒரு கதாபாத்திரத்தை கொண்டுவர இருக்கிறார்கள்.
ஆகையால் அடுத்த குணசேகரன் என்ட்ரி விரைவில் வர இருக்கிறது. அதற்கான ரகசியத்தை தான் இப்போது சாமியார் உடைக்க இருக்கிறார். ஆகையால் இனி ஆதி குணசேகரன் வீட்டு மருமகள்களை அச்சத்தில் ஆழ்த்த குணசேகரனை மிஞ்சும் அளவிற்கு பவர்ஃபுல்லான கதாபாத்திரத்தை கொண்டுவர உள்ளார்.