அட்டூழியத்துக்கு மொத்த உருவமாக இருக்கும் குணசேகரன் கதிர்.. ஜனனி சக்தி எடுக்கும் அதிரடி நடவடிக்கை

சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது ரொம்பவே பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. குணசேகரன் அப்பத்தாவை நான் வேற ஆஸ்பத்திரியில் கொண்டு போய் நன்றாக பார்த்துக் கொள்வேன். என்னிடம் அந்த அளவுக்கு வசதி இருக்கு என்று மருத்துவமனையில் டாக்டர் மற்றும் போலீஸிடம் சொல்லி அப்பத்தாவை அங்கிருந்து கூட்டி போய்விட்டார். ஜனனி எவ்வளவு தடுத்தும் அதையெல்லாம் மீறி குணசேகரன் அப்பத்தாவை அவர் இஷ்டப்படி கூட்டுப் போய்விட்டார்.

பிறகு ஜனனி மற்றும் சக்தி அப்பத்தாவை எந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகிறீர்கள் என்று கேட்டதற்கு ஏதோ ஒரு ஆஸ்பத்திரி பெயரை சொல்லிவிட்டார். அடுத்ததாக ஜனனி அப்பத்தாவை ஒவ்வொரு ஆஸ்பத்திரிக்கும் போய் தேடி வருகிறார். ஆனால் குணசேகரன் என்றைக்கு சொன்ன செயலை காப்பாற்றி இருக்கிறார். அது மாதிரி தான் அப்பத்தாவை அவருடைய வீட்டிற்க்கே கொண்டு வந்து விட்டார்.

இது தெரியாமல் தெருத்தெருவாய் தேடிக் கொண்டு அலைகிறார். பிறகு குணசேகரன் ரூமில் வைத்து அவரை பார்த்துக் கொள்வதற்கு நர்சை வைத்துக் கொண்டார். இதற்கு அடுத்து குணசேகரன் அவர்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரிடம் இந்த ரூமுக்கு என்னைத் தவிர வேறு யாரும் போகக்கூடாது எதுனாலும் நான் மட்டும்தான் உள்ளே போய் பார்ப்பேன் என்று கூறிவிட்டார். பிறகு இந்த விஷயத்தை ஜனனிடம் சொல்லி அவரை வீட்டுக்கு கூப்பிடுகிறார் நந்தினி.

அவர்கள் வீட்டுக்கு வந்ததும் அப்பத்தாவை பார்ப்பதற்கு போகிறார்கள். ஆனால் குணசேகரன் நீ உள்ளே போக கூடாது உனக்கு எந்த உரிமையும் இல்லை என்று சொல்கிறார். பெரிய வாக்குவாதத்திற்கு பிறகு கதிர், ஜனனி சக்தியை வெளியே தள்ளி விடுகிறார். இப்படி குணசேகரன் கதிர் செய்த அட்டூழியத்துக்கு முடிவு கட்டுவதற்காக ஜனனி அடுத்த கட்ட நடவடிக்கையாக போலீஸ் இடம் உதவி கேட்கிறார்.

பிறகு போகும் வழியிலேயே போலீசை பார்த்து ஜனனி பேசுகிறார். இந்த போலீஸ் ஏற்கனவே குணசேகரன் வீட்டிற்கு வந்து எச்சரிக்கை கொடுத்துவிட்டு போனவர். அதனால் மறுபடியும் இன்னும் கூட குணசேகரன் திருந்தவில்லையா என்று ஜனனிக்கு உதவி பண்ணுகிறேன் என்று அனைவரும் மனித உரிமை சங்கத்தில் புகார் அளிக்கிறார்கள்.

அடுத்ததாக அவர்கள் அனைவரும் குணசேகரன் வீட்டுக்கு வருகிறார்கள். ஆனாலும் எதற்கு அசராத குணசேகரன் அப்பதாவை நான் ரொம்ப நன்றாகவே பார்த்துக் கொள்கிறேன். இந்த பொண்ணு சொல்றது எதையும் நம்பாதீங்க என்று சொல்கிறார். ஆனாலும் இதையெல்லாம் கேட்டு கண்டிப்பாக அவர்கள் அமைதியாக போக மாட்டார்கள் ஜனனிக்கு உதவியாக அப்பத்தாவை இருக்கும் படி வைப்பார்கள். அத்துடன் கதிர் பேசின பேச்சுக்கு அவர் ஒரு அடியாவது வாங்கினால் தான் பார்க்கிற நமக்கு திருப்தியாக இருக்கும். பார்க்கலாம் இன்றைய எபிசோடுகளில் ஜனனிக்கு சாதகமாக வருகிறதா என்று.