சாருபாலா பேச்சால் பயத்தில் புலம்பும் குணசேகரன்.. ஜனனி, ஆதிரை திருமணத்தில் வைத்திருக்கும் பிளான்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் தற்போது ஆட்ட நாயகன் ஜீவானந்தம் களம் இறங்கியதும் படுவேகமாக சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. அதிலும் இவர் கட்டப்பஞ்சாயத்து பண்ணி இல்லாதவர்களுக்கு நல்லது செய்யும் மாஸான கேரக்டர். அதற்கான வழியில் தற்போது சிக்கி இருப்பது எஸ் கே ஆர்.

இவரை மடக்குவதற்காக இவரின் தம்பி அருணை வைத்து காய் நகர்த்துகிறார். அதுவும் இதற்கு துணையாக இருப்பது ஜனனி நண்பராக இருக்கும் கௌதம். அப்படி என்றால் ஜனனி பிளான் பண்ண படி ஆதிரை திருமணத்திற்கு கௌதம் அருணை கூட்டிட்டு வருவாரா அல்லது ஜீவானந்தத்திடம் ஒப்படைக்க கூட்டிட்டு போவாரா என்பதில் தான் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது.

இதற்கிடையில் சாரு பாலா குணசேகரனை கூப்பிட்டு லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி அதுவும் குணசேகரன் பாணியிலே தர லோக்கலாக பேசி எல்லோரையும் வாய் அடக்கி வைத்து விட்டார்.
குணசேகரனின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் வித்தை சாரு பாலாவிடம் மட்டும் தான் இருக்கிறது. அவர் பேசினால் மட்டும்தான் பொட்டி பாம்பாக அடங்கி விடுகிறார்.

கடைசியில் குணசேகரனுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று தெரிந்த பின்பு முறைப்படி போலீஸ் கம்பளைண்ட் கொடுத்து அருணை தேடி பிடிக்கும் படி சொல்கிறார். ஆனாலும் சாருபாலா பேசின பிறகு குணசேகரன் அடிமனதில் பயம் வந்ததால் புலம்பி கொண்டிருக்கிறார்.

அதனால் இவருடைய அல்லக்கையாக இருக்கும் கதிர் மற்றும் ஞானத்திடம் இந்த கல்யாணம் எந்த காரணத்தை கொண்டும் நின்று விடக்கூடாது அதற்காக நீங்கள் இருவரும் உஷாராக இருக்க வேண்டும் என்று சொல்கிறார். அவர்களும் இவர் என்ன சொன்னாலும் நல்லது என்று தலையாட்டிக் கொண்டு ஓகே சொல்கிறார்கள்.

அடுத்ததாக குணசேகரன் அப்பத்தாவை வைத்து வேறு ஏதோ பிளான் போடுகிறார் என்று தெரிந்து கொண்ட ஜனனி, அப்பத்தாவின் அறையில் கேமராவை வைத்து விடுகிறார். அடுத்து அனைவரும் வீட்டில் இருந்து மண்டபத்திற்கு சென்றதும் குணசேகரனின் ஆடிட்டர் வீட்டிற்கு வந்து அப்பத்தாவிடம் இருந்து கைரேகை வாங்க போகிறார். இதை தெரிந்து ஜனனி எப்படி தடுக்க போகிறார் என்பதுதான் தற்போது விறுவிறுப்பாக போகக்கூடிய கதை.