Ethirneechal Actor Gunasekaran: சீரியலில் நடிப்பதன் மூலம் ஒருவரால் இவ்வளவு பாப்புலர் ஆக முடியுமா என்பதை வியந்து பார்க்கும் அளவிற்கு அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர் தான் குணசேகரன். இவருக்காக தான் எதிர்நீச்சல் சீரியலை பார்க்கிறோம் என்று சொல்லும் அளவிற்கு இவருடைய பெர்பார்மன்ஸ் விறுவிறுப்பாக இருக்கிறது.
இது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் இவரை கரித்துக் கொட்டுபவர்கள் இருக்க தான் செய்கிறார்கள். இப்படி ஒரு பிற்போக்குத்தனமான ஆளை நான் எங்கேயும் பார்த்ததே கிடையாது என்று இவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அத்துடன் சரியான பூமர் என்றும் இவரை கலாய்த்து வருகிறார்கள்.
இதைப் பற்றி இவரிடம் கேட்டதற்கு இவர் கொடுத்த பதிலடி, யார் பூமர் இந்த உலகத்திலேயே மிகவும் முற்போக்கவாதி நான் தான், என் பிள்ளைகளுக்கு மாற்றுச்சாதியில் கல்யாணம் பண்ணி வைத்திருக்கிறேன். எப்பொழுதும் ஜாதகத்தை கக்கத்துல வைத்துக் கொண்டு அலைவார்களே அவர்கள் தான் பிற்போக்கவாதி, நான் எப்படி பூமராக இருப்பேன்.
என்னை பூமர் சொல்றவர்கள் எல்லாரும் இடியட்ஸ், இவர்கள் எல்லாரும் அரைகுறை நாய்கள். எவனுக்கும் ஒழுங்காக வாழ தெரியலை, எதையும் சரியான முறையில் செய்ய தெரியலை, முடியை வெட்ட சொன்னா நாய் குதற்ன மாதிரி கருமிட்டு வந்து நிக்கிறாங்க.
அவங்க கண்ணுக்கு எல்லாம் நான் பூமராகத்தான் தெரிவேன். நான் எல்லாத்துக்கும் பர்ஃபெக்சன் பார்க்கக்கூடிய ஆளு. எவனுக்கும் பர்ஃபெக்சஷனா என்ன என்று தெரியவில்லை, நான் ஜப்பான் காரன். ஜப்பான்ல பிறந்திருக்க வேண்டிய ஆளு தெரியாம இங்க பிறந்துட்டேன். இவங்களெல்லாம் ஊசி போட்டு கொண்ணு கடல்ல அள்ளிப் போடணும்.
என்னைப் பற்றி விமர்சிக்கிற நாய்களுக்கு நான் பதில் சொல்லத் தேவையில்லை என்று ஆவேசமாக பொங்கி எழுகிறார். அதாவது யாரிடம் நேர்மையும் உண்மையும் இருக்கிறதோ அவர்களிடம் அதிகமாக கோபம் இருக்கும் என்று சொல்வார்கள். அது இவருடைய விஷயத்தில் சரியாகத்தான் இருக்கிறது.