குணசேகரன் ஜனனி கண்ணில் மண்ணைத் தூவிய ஜீவானந்தம்.. சோணமுத்தா போச்சா 40% ஷேர்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் தற்போது ஜீவானந்தம் நல்லவரா கெட்டவரா என்ற குழப்பத்திலேயே போய்க் கொண்டிருக்கிறது. எதற்கு அப்பத்தா இவரை பற்றி தெரிந்தும் ஜீவானந்தம் பெயரை ஜனனிடம் புலம்பிக்கொண்டே இருந்தார். பாவம் ஜனனி என்னதான் பண்ணுவா குணசேகரனிடம் இருந்து சொத்தை காப்பாற்ற போராட போகிறாரா அல்லது ஜீவானந்தத்தை சமாளிக்க போகிறாரா.

ஆக மொத்தத்தில் இவ்வளவு நாளாக அப்பத்தாவின் சொத்துக்கு அடி போட்டுக்கிட்டு இருந்த குணசேகரனுக்கு கடைசியில் ஒன்னும் இல்லாமல் போனது தான் மிச்சம். தற்போது எல்லாருடைய குடும்பியும் ஜீவானந்தம் கையில் மாட்டிக் கொண்டது. ஆனால் அது தெரியாமல் இந்த மக்கு ஜனனி குணசேகரனிடம் சண்டை போடுகிறார்.

பாவம் அவரே ஆடிட்டர் இப்படி கவுத்து விட்டாரே என்று படும் கோபத்தில் இருக்கிறார். ஆனாலும் இதற்கு இடையில் மிகப்பெரிய சந்தேகம் என்னவென்றால் முறைப்படி அப்பத்தா ஏற்கனவே குணசேகரனுக்கு சொத்தை எழுதி கொடுத்துவிட்டார். இதுவே முக்கால்வாசி சொத்து அவரிடம் போனதற்கு சமம். இப்படி இருக்கும் பொழுது புதிதாக ஜீவானந்தம் அப்பத்தாவின் கைரேகை மட்டும் வாங்கினால் அது செல்லுபடி ஆகுமா.

இந்த பத்திரத்தை வைத்து அவரால் என்ன பண்ண முடியும். தற்போது ஜனனி மற்றும் குணசேகரன் ஆதிரை கல்யாணத்தில் கவனம் செலுத்துவதால் இதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனாலும் இனிமேல் தான் இவர்களுக்கு பிரச்சனையே ஆரம்பமாகப் போகிறது. அதாவது கௌதம் ஏற்கனவே அருணை வேறொரு இடத்தில் பத்திரமாக வைத்திருப்பதாக ஜனனி இடம் சொல்லி இருக்கிறார்.

இப்படி இருக்கையில் ஆதிரை திருமணம் நடக்கும் சமயத்தில் அருணை சரியான நேரத்தில் கொண்டு வந்து விடுவாரா. அப்படி இல்லையென்றால் அருணை ஜீவானந்தம் பகடைக்காயாக யூஸ் பண்ணி எஸ் கே ஆர் இடமிருந்து ஏதாவது பேரம் பேசப் போகிறாரா என்பது தான் முக்கிய திருப்பமாக இருக்கிறது.

அப்படி வரவில்லை என்றால் ஆதிரை திருமணம் யாருடன் நடக்கும். இதனால் ஜனனி குணசேகரன், ஜீவானந்திடமிருந்து தோற்று தான் நிற்கப் போகிறார்கள். ஆனாலும் கடைசியில் இந்த ஜீவானந்தத்தை வைத்து தான் அந்த வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மோட்சம் கிடைக்கப் போகிறது. அதுவரை புரியாத புதிராக ஜீவானந்தம் கேரக்டர் இருக்கப் போகிறது.