அடிபட்ட பாம்பாக நிற்கும் குணசேகரன்.. அப்பத்தாவால் மருமகளுக்கு ஏற்பட்ட விடிவுகாலம்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் திருவிழா மற்றும் அப்பத்தா ஏற்பாடு பண்ணின நிகழ்ச்சியில் ஏதாவது தரமான சம்பவம் இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் அப்பத்தா அவருடைய 40% ஷேர்க்கு மட்டும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

அதாவது 40% சொத்தில் ஒரு பங்கு பெண்கள் முன்னேற்றத்திற்காக ஒரு இயக்கத்தை ஆரம்பித்து அதனை தலைமை பொறுப்பேற்க ஜீவானந்தத்தை நியமித்து விட்டார். பின்பு மீதமுள்ள சொத்துக்களை அப்பத்தா அவருடைய கொள்ளு பேரன், கொள்ளு பேத்திகளுக்கு எழுதி வைத்திருக்கிறார்.

ஆனால் அவர்கள் தற்போது மைனராக இருப்பதால் அந்த சொத்துக்களை பாதுகாக்கும் பொறுப்பை குணசேகரனின் வீட்டில் உள்ள பெண்களிடம் ஒப்படைத்திருக்கிறார். அத்துடன் அந்த சொத்துக்களை மற்ற நபரிடம் விற்கவோ பரிசாக கொடுக்கவும் முடியாது என்று நிபந்தனையுடன் சொத்துக்களை எழுதி வைத்திருக்கிறார்

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி முடிவடையும் தருணத்தில் குணசேகரன் ஜீவானந்தம் மேடையில் நிற்கும் பொழுது அந்த மர்ம நபர் ஜீவானந்தத்தை குறி வைத்தார். இதற்கிடையில் குணசேகரனை காலி பண்ணுவதற்கு கௌதம் மறைமுகமாக இருந்து குறி வைத்து காத்துக் கொண்டிருந்தார்.

அப்படி அவர் சுடும் பொழுது அந்த மர்ம நபர் கையில் துப்பாக்கி இருப்பதை பார்த்த கௌதம், ஜீவானந்தத்தை காப்பாற்றுவதற்கு அந்த மர்ம நபரை சுட்டுவிட்டார். இதனால் அந்த நிகழ்ச்சி பரபரப்பாக ஆனது. ஆனால் கதிர் மட்டும் இதற்கெல்லாம் காரணம் ஜீவானந்தம் தான் என்று அப்படியே மொத்த பழியையும் அவர் மீது திருப்பி விட்டார்

அடுத்ததாக வீட்டிற்கு வந்ததும் கதிர் வானத்துக்கும் பூமிக்கும் குதித்து இதெல்லாம் பண்ணினது கௌதம் தான். ஏற்கனவே என்னை கடத்திட்டு போயி அடிச்சவனும் அவன் தான். அதுமட்டுமில்லாமல் அவன் என்னிடமே உங்க அண்ணனை நான் சும்மா விடமாட்டேன் என்று சவால் விட்டான். அதனால் ஜீவானந்தம் சொல்லி தான் கௌதம் இந்த மாதிரி பண்ணி இருக்கான் என்று கதிர் சொல்கிறார். ஆனாலும் தற்போது குணசேகரன் அடிப்பட்ட பாம்பாக இருக்கிறார். ஏனென்றால் அவர் ஆசைப்பட்ட சொத்தும் அவருக்கு கிடைக்கவில்லை, ஜீவானந்தத்தையும் எதுவும் பண்ண முடியவில்லை. இதன் பிறகு குணசேகரன் என்ன செய்யப் போகிறார் என்பது தான் பரபரப்பாக இருக்கும்.