Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், கமுக்கமாக இருந்து காரியத்தை சாதிக்க நினைத்த குணசேகரன், மணிவிழாவில் பெருத்த அடியை வாங்கப் போகிறார். தான் என்ன பண்ணினாலும் தம்பிகள் ஆமாம் சாமி போடுற மாதிரி மற்றவர்களும் போடுவாங்க என்று தப்பு கணக்கு போட்டு விட்டார். அதற்கு ஏற்ற மாதிரி குணசேகரன் கண் முன் ஜெயித்து காட்ட வேண்டும் என்று நினைத்த பெண்களும் தற்போது எல்லாத்துக்கும் தலையாட்டி வருகிறார்கள்.
முக்கியமாக ரேணுகா மற்றும் நந்தினி, ஜனனி ஈஸ்வரிக்கு சப்போர்ட்டாக பேசுவது போல் இருந்தாலும் கணவர்மார்களிடம் காட்டும் பாசத்தையும் அன்பையும் மட்டும் குறைச்சிக்கவே இல்ல. இதுல வேற அந்த வீட்ல எங்களுக்கு என்ன இருக்கிறது யாரு எங்களுக்கு இருக்கிறார் என்று டயலாக் மட்டும் வந்துவிடும்.
தற்போது எல்லாத்துக்கும் பதில் அளிக்கும் விதமாக குணசேகரன் ஆசை ஆசையாக ஏற்பாடு பண்ணும் மணிவிழாவில் பெரிய கலாட்டா நடக்கப்போகிறது. மணிவிழாவுக்கு தயாராகிய குணசேகரன், மாமியார் வீட்டுக்கு கூட்டிட்டு போக போலீஸ் வரப் போகிறார்கள். அதாவது பரோலில் வந்திருக்கும் குணசேகரனுக்கு பரோல் முடிந்து விட்டதால் போலீஸ் வந்து குணசேகரனை கூட்டிட்டு போகப் போகிறார்கள்.
ஆனால் இதற்கெல்லாம் காரணம் ஜனனி தான் என்று எல்லோரும் ஜனனி மீது பழி போட போகிறார்கள். குணசேகருக்கு ஏற்கனவே மனதில் ஒரு பயம் வந்திருக்கிறது. அதனால் தான் சக்தியிடம் இந்த பங்க்ஷன் நல்லபடியாக நடக்குமா என்பது எனக்கு கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது. எல்லாம் உன் மனைவியை நினைத்து தான் பயம் என்று சொல்லும்போதே குணசேகரின் மணிவிழா, மூடுவிழாவாக மாறப்போகிறது என்பது உறுதியாகிவிட்டது.
அதற்கு ஏற்ற மாதிரி தற்போது குணசேகரன் ஜெயிலுக்கு போவதால் மொத்த கோபத்தையும் ஜனனி மீது சக்தி காட்டப் போகிறார். ஏற்கனவே சக்திக்கு ஜனனி மீது அடிக்கடி கோபம் வந்து கொண்டே இருக்கிறது. தற்போது இந்த ஒரு காரணத்தை வைத்து இரண்டு பேரும் பிரிவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த ரணகளத்தில் குளிர் காயும் விதமாக குந்தவை உள்ளே புகுந்து சக்தியுடன் ஜோடி சேர்ந்து விடுவார். கடைசியில் மணிவிழாவும் இல்லை, குணசேகரனின் ஆட்டமும் அடங்கப் போகிறது.