சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் தற்போது ஜீவானந்தம் என்ட்ரி ஆன பிறகு நாடகமே வேற லெவல்ல மாறிவிட்டது. அதிலும் இவருடைய கேரக்டர் யாரும் எதிர்பார்க்காத மாதிரி அடித்தட்டு மக்களுக்காக சில கட்டப்பஞ்சாயத்துகளை செய்து அதன் மூலம் நல்லது செய்யும் ஒருவராக சும்மா அதிர வைக்கிறார்.
அடுத்ததாக ஆதிரையின் திருமணத்திற்காக குணசேகரன் வீடு களக்கட்டுகிறது. ஒரு பக்கம் குணசேகரன் தான் நினைத்த படி தான் திருமணம் நடக்கப்போகிறது என்ற ஆணவம். மறுபக்கம் ஜனனி, குணசேகரனின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்று அவருக்கு எதிராக நடத்தும் ஆதிரையின் திருமணம். ஆனால் இவர்கள் இரண்டு பேருக்குமே கடைசியில் ஏமாற்றமாக அமையப்போகிறது அதுதான் மிகப்பெரிய ட்விஸ்ட்.
அது என்னவென்றால் ஏற்கனவே ஜீவானந்தம், யாரெல்லாம் பணக்காரர்கள் என்ற லிஸ்ட்டை வைத்து அவர்களுக்கு வேண்டியவர்களை ஃபாலோ பண்ணி அவர்களை வைத்து மிரட்டி ஜீவானந்தம் நினைத்த காரியத்தை சாதித்துக் கொள்கிறார். அப்படி இருக்கும் போது இவருடைய ஆளாக இருக்கும் கௌதம் கிட்ட வாண்ட்டாக மாட்டிக்கொண்டு இவருடைய கஸ்டடியில் அருண் இருக்கிறார்.
அதனால் இவரை வைத்து கண்டிப்பாக ஜீவானந்தம் மாஸ்டர் பிளான் போடுவார். அப்படி இருக்கும் பொழுது ஆதிரையின் திருமணம் என்ன ஆகும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அடுத்ததாக அருணை காணவில்லை என்று எஸ் கே ஆர் குடும்பம் குணசேகரன் மேல் போலீஸ் கம்பளைண்ட் கொடுத்திருக்கிறார்கள்.
இதனால் ஆதிரையின் திருமணத்திற்கு போய்க் கொண்டிருக்கும் குணசேகரனுக்கு போலீஸ் கால் பண்ணி எஸ் கே ஆர் இருக்கும் இடத்திற்கு வரச் சொல்கிறார். அடுத்ததாக ஜனனி மற்றும் மற்ற மருமகள் ஆதிரையை கூட்டிக்கிட்டு எப்படியாவது வெளியே போக வேண்டும் அதற்கு நீங்கள் தான் உதவி செய்யணும் என்று குணசேகரனின் அம்மாவிடம் கேட்கிறார்.
இவர்கள் நினைத்தபடி ஆதிரையை கூட்டிட்டு வெளியே போனாலும் அங்கே அருண் வருவானா என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. கண்டிப்பாக அருணை ஜீவானந்தம் தூக்கிருப்பார். இதனால் அடுத்து என்ன வர இருக்கிறது என்று யோசிக்க முடியாத அளவிற்கு ஒவ்வொரு முடிச்சுகளாக அமைகிறது. பார்க்கலாம் எந்த மாதிரி கதை வரப்போகிறது என்று.