எதிர்நீச்சல் 2 சீரியலில் பதுங்கி நின்னு பாயும் குணசேகரன்.. குந்தவையுடன் பேசிய சக்தி, ஃபீல் பண்ணும் ஜனனி

Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், புலி பதுங்குவது பாயதற்குத்தான் என்று ஒரு சொலவடை உண்டு. அது போல் தான் குணசேகரன் அடாவடியாக இருந்து ராஜ்யம் பண்ண வேண்டும் என்று நினைத்த நிலையில் அது எதுவும் எடுபடாமல் போய்விட்டது. அதனால் ரூட்டை மாற்ற வேண்டும் என்று முடிவு பண்ணிய குணசேகரன் பதுங்கி நின்னு பாய்வதற்கு துணிந்து விட்டார்.

அந்த வகையில் ஊர்காரங்க முன்னாடி குணசேகரன் அசிங்கப்பட்டதற்கு குணசேகரன் ஏற்பாடு பண்ணிய ஆட்கள் தான் காரணம் என்று புரிந்து விட்டது. அதாவது குணசேகரன் தம்பிகள் முன்னாடி அவமானப்பட்டால் தான் எல்லாம் சரி பண்ண முடியும் என்பதை யோசித்து பக்கவாக காய் நகர்த்திருக்கிறார். அதன்படி முட்டாளாக இருக்கும் தம்பிகளும் அண்ணன் அசிங்கப்பட்டார் என்று தெரிந்ததும் ஆவேச பட ஆரம்பித்து விட்டார்கள்.

இதை பார்த்த மருமகள்களும் என்னதான் இருந்தாலும் தன் குடும்பத்தை மூன்றாவது மனசங்க இப்படி அவமானப்படுத்தி பேசுவது பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று ஃபீல் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள். இதை எல்லாம் நமக்கு சாதகமாக போகிறது என்று யோசித்த குணசேகரன் அடுத்த ட்ராமாவுக்கு வழி வகுத்தார். அதில் விசாலாட்சி சிக்கிய நிலையில் அதை வைத்து, வீட்டு மருமகள் வீட்டிற்கு வந்து விட்டார்கள்.

வந்ததும் இவர்களை மறுபடியும் அடக்கியாளும் திறமையை கைப்பற்ற வேண்டும் என்று நினைத்த குணசேகரன் தம்பிகளுக்கு போட்ட கட்டளை என்னவென்றால் எல்லோரும் அவர்களுடைய பொண்டாட்டிகளை பாசத்தாலும் அன்பாலும் அடக்கி காட்டுங்கள். அதன் பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லியிருந்தார். அதற்கு ஏற்ற மாதிரி ரேணுகா மற்றும் நந்தினியும் மறுபடியும் அடுப்பாங்கரையில் போய் சமைத்து எல்லோருக்கும் பணிவிடை பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.

இதுதான் எனக்கு வேண்டும் என்று குணசேகரன் போட்ட பிளான் படி ஜெய்த்து காட்டி விட்டார். அந்த வகையில் கதிர், மொத்த பாச ட்ராமாவையும் நந்தினிடம் காட்டி அடக்கி விட்டார். ஞானம், ரேணுகாவை தன் பக்கம் இழுத்துக் கொண்டார். இதில் பாவமாக ஈஸ்வரி மற்றும் ஜனனி தான் மாட்டிக் கொண்டு முழிக்கிறார்கள். அதிலும் ஈஸ்வரியிடம் நான் பண்ணியது தவறு என்று தர்ஷன் மன்னிப்பு கேட்டு மகன் ட்ராமாவை போட்டுவிட்டார்.

ஆனால் ஜனனி, சக்தி மீது இருக்கும் பாசத்தினால் சக்தி அன்புக்கு அடிபணிந்து விட்டார். இருந்தாலும் சக்திக்கு தொடர்ந்து குந்தவை மெசேஜ் அனுப்பியதை பார்த்து ஜனனி பீல் பண்ணுகிறார். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்திலும் லாக் ஆகி குணசேகரனுக்கு அடிமையாகி விட்டார்கள். இனி இதை வைத்து குணசேகரன் அடுத்த பிளான் போட்டு ஒரேடியாக வீட்டுப் பெண்களை அடுப்பாங்கறையில் வேலை பார்க்கும் அடிமைகளாக ஆக்கிவிடுவார்.

Leave a Comment