Ethir Neechal 2: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் 2 தொடரில் பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. அதாவது வீட்டை விட்டு வெளியே சென்ற மருமகள்களை நாடகமாடி குணசேகரன் வீட்டுக்குள் வரவைத்து விட்டார்.
ஆனால் அவர் சொல்லும்படி எல்லாமே நடக்க வேண்டும் என்பதற்காக தனது தம்பிகளிடம், அவர்களது மனைவியிடம் நடிக்க சொல்லி உள்ளார். அதேபோல் பாசமாக இருப்பது போல் தம்பிகளும் நடித்து வருகிறார்கள்.
கொஞ்சம் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருந்த இந்த தொடரில் மீண்டும் முருங்கை மரம் ஏறியது போல் அருவையான காட்சிகளை உருட்ட தொடங்கி இருக்கிறார் இயக்குனர். அதாவது மாமியாருக்கு ஜனனி மாத்திரைகள் எல்லாம் எடுத்துக் கொடுக்கிறார்.
ஜனனியை ஒதுக்கி வைக்கும் குணசேகரன்
ஆனால் உன்னால தான் எங்க அம்மா இப்படி ஆயிட்டாங்க, ஏன் தனியா விட்டுட்டு போன என ஜனனியை குத்தம் சொல்கிறார் குணசேகரன். போதாகுறைக்கு சக்தியும் இது எங்க அம்மா நாங்க பார்த்துக்கிறோம் நீ விட்டுடு என்று அதட்டி பேசுகிறார்.
இப்போது தான் ஜனணியுடன் அரவணைப்பாக நடந்த சக்தி மீண்டும் அடாவடியாக மாறுகிறார். மற்றொருபுறம் குணசேகரனுடன் சேர்ந்து யாகத்தில் உட்கார ஈஸ்வரி சம்மதித்திருக்கிறார்.
மேலும் மருமகள்கள் எப்போதுமே தனக்கு அடிமையாக தான் இருக்க வேண்டும், வீட்டுக்கு வெளியே போகக் கூடாது என பல சித்து வேலைகளை அரங்கேற்றி வருகிறார் குணசேகரன். இதெல்லாம் மருமகள்கள் முறியடிப்பார்களா என்று கதைக்களத்துடன் இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.