Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து, வார்த்தையாலேயே அவருடைய நடிப்பை கொடுத்து வீட்டிற்கு வாழ வந்த மருமகளை ஆட்டி படைத்தார். ஆனால் தற்போது வேலராமமூர்த்தி பேச்செல்லாம் இல்ல, ஆக்சன் தான் என்பதற்கு ஏற்ப கமுக்கமாக இருந்து மொத்த வன்மத்தையும் காட்டுகிறார்.
அந்த வகையில் குணசேகரனின் முதல் டார்கெட் ஜனனி தான் என்பதற்கு ஏற்ப ஜனனியை சக்தி வாழ்க்கையை விட்டும், வீட்டை விட்டும் வெளியே அனுப்புவதற்கு துணிந்து விட்டார். அதனால் தான் குந்தவை மூலம் மறைமுகமாக சக்திக்கு ஒரு பிசினஸை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். அவ்வப்போது சக்தி வாழ்க்கைக்குள் நுழைந்து சக்தி மனசை மாற்றுவதற்கு குந்தவை குணசேகரன் போட்ட பிளான் படி செயல்படுகிறார்.
மேலும் பரிகாரம் செய்வதற்கு குணசேகரன் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் கோவிலுக்கு கிளம்பிய நிலையில் பிளான் பண்ணி ஜனனியை மாட்டி விட்டிருக்கிறார்கள். ஹீட்டர் வெடித்து புகை பரவும் ரூமில் மாட்டிக் கொண்டு ஜனனி அவஸ்தப்பட்ட நிலையில் அங்கே வந்த குற்றவை ஜனனியை காப்பாற்றி விட்டார்.
பிறகு கோவிலில் இருக்கும் ஈஸ்வரிக்கு போன் பண்ணி அனைவரும் வீட்டிற்கு வர வேண்டும் என்று சொல்லிவிட்டார். வந்த நிலையில் இதற்கு காரணம் குணசேகரன் தான் என்று நம்பிய குற்றவை ஜட்ஜ் முன்னாடி குணசேகரனை நிப்பாட்டுவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் பண்ணிவிட்டார்.
ஆனால் அங்கே போன குணசேகரனின் லாயர் குணசேகரன் வீட்டுக்கு திரும்ப கூட்டிட்டு வரும்படி ஜட்ஜ்யிடம் பேசி விட்டார். மொத்த கோபத்துடன் வீட்டிற்கு வந்த குணசேகரன், ஜனனியை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் கொதித்துப் போய் இருக்கிறார். ஆனால் ஜனனி குணசேகரனிடம் பேச வந்த பொழுது அராஜகமாக குணசேகரன் நடந்து கொண்டார்.
குணசேகரன் வீட்டில் இருந்து கொண்டு செண்டிமெண்ட் டிராமாவுக்கு அடிபணிந்து வரும் நான்கு பெண்களும் கடைசிவரை இப்படியே இருந்தால் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு ஜெயிக்க முடியாது. வாய் சவடால் தான் விட முடியும் என்பதற்கேற்ப ஒவ்வொரு விஷயத்திலும் தோற்றுப் போய் வருகிறார்கள்.