போலீசையே வார்த்தைகளால் பதம் பார்க்கும் குணசேகரன்.. கொத்தாக சிக்கிய எதிர்நீச்சல் குடும்பம்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் அகங்காரம் தற்பொழுது ஆட்டம் கண்டுள்ளது. ஆதிராவை குடும்ப கவுரவத்திற்காகவும், வரட்டு பிடிவாதத்திற்காகவும் கடுமையான வார்த்தைகளால் விளாசி வந்துள்ளார். இதனால் விபரீத முடிவை எடுத்துள்ள ஆதிரா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஆதிரா, அருண் உடன் தனிமையில் பேசிய நிலையில் கதிர் தனது பலத்தால் நடு ரோடு என்று கூட பார்க்காமல் வெளுத்து வாங்கியுள்ளார். இதனை அருண் தனது அண்ணனிடம் இருந்து மறைத்துள்ளார். பின்னர் இந்த சம்பவமானது வைரலான நிலையில், குணசேகரனை சிறையில் அடைக்க வேண்டும் என்று தற்பொழுது காவல் நிலையம் வரை சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து எஸ் கே ஆர் இன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தனது தம்பியை நடு ரோட்டில் வைத்து, அடித்து அவமானப் படுத்தியதற்கு கதிரை பழிதீர்க்க காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சம்பவம் ஆனது குணசேகரனுக்கு பெரிய அதிர்ச்சியினை அளித்துள்ளது.

அனைவரும் காவல் நிலையம் சென்றுள்ள நிலையில் கதிர் செய்து கொண்டிருக்கும் அராஜகத்தை பற்றிய உண்மையை போலீசார் இடம் முன் வைக்கின்றனர். இதன் மூலம் கோபத்தின் உச்சிக்கே சென்ற கதிர் போலிசாரின் முன்னிலையில் எதிரியின் குடும்பத்தின் மீது தாக்குதலை நடத்த முற்படுகிறார்.

அதனைத் தொடர்ந்து போலீஸ் அதிகாரி கதிரை தனது அதிகாரத் தோரணையில் மிரட்டி விடுகிறார். எதிரி குடும்பத்தின் முன்னிலையில் கதிரை, போலீசார் அவமானப்படுத்தியதை பொறுத்துக் கொள்ள முடியாமல் குணசேகரன் பொங்கி  எழுந்துள்ளார். வார்த்தைகள் எல்லாம் ரொம்ப கடுமையாக உள்ளது என்று உயர் அதிகாரியாக இருக்கக்கூடிய போலீசாரையே குணசேகரன் தனது வார்த்தைகளால் பதம் பார்த்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து குணசேகரனின் அதிகாரம் குடும்பத்தில் மட்டுமே செல்லுபடி ஆகும். ஆனால் காவல்துறை அதிகாரிகளிடம் எடுபடாமல் மூக்கு உடைந்து நிற்க போகிறார் என்று தெளிவாக தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் ஆதிராவை தற்கொலைக்கு தூண்டியதால் கதிர் மற்றும் குணசேகரன் என இருவரும் சிறை செல்ல வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அதுவும் கூடிய விரைவிலேயே நடக்க வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.