எதிர்நீச்சல் 2 சீரியலில் களி தின்ன போகும் குணசேகரனின் தம்பி.. பார்கவி கொடுக்கும் வாக்குமூலம்

Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், நம்ப வச்சு முதுகில் குத்துவது ஒன்னும் குணசேகரனுக்கு புதுசு இல்ல. ஆனால் இந்த குணசேகரனை நம்பி ஈஸ்வரி எடுத்த முடிவு தான் தவறானது. ஜீவானந்தம் கஸ்டடியில் பார்கவி வாத்தியார் பாதுகாப்பாக இருந்திருப்பார்கள். ஆனால் தர்ஷனுக்காக, பார்கவி வாத்தியாரை வீட்டிற்கு கூட்டிட்டு வாங்க என்று ஜீவானந்தனிடம் ஈஸ்வரி சொல்லியிருந்தார்.

அதை நம்பி ஜீவானந்தமும் வீட்டிற்கு கூட்டிட்டு வந்த நிலையில் குணசேகரன் தம்பிகள் மற்றும் அறிவுக்கரசியின் கூட்டாளிகள் மொத்தமாக சேர்ந்து பார்கவி மற்றும் வாத்தியாரை அடித்து துன்புறுத்தி விட்டார்கள். இதனால் வாத்தியார் உயிர் பரிதாபமாக போய்விட்டது. அப்பாவின் இழப்பை தாங்க முடியாத பார்கவி தற்போது எதுவும் இல்லாமல் நிற்கதியாக நிற்கிறார்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட குணசேகரன் வீட்டு நான்கு பெண்களும் நதி கரை தாண்டி விட்டால் காடுகரை கொள்ளாது, பெண்ணும் படி தாண்டி விட்டாள் நாடும் வீடும் தாங்காது, நதிகளும் பெண்களும் இயற்கையில் சமம் தானே என்று சொல்வதற்கு ஏற்ப குணசேகரன் அக்கிரமத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு எதிர்நீச்சல் போட தயாராகி விட்டார்கள்.

இவர்களுக்கு கைகோர்க்கும் விதமாக குற்றவை சாருபாலா சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுக்கும் விதமாக சப்போர்ட்டாக நிற்கிறார்கள். அந்த வகையில் பார்க்கவி வாக்குமூலம் கொடுத்து விட்டால் ஈஸியாக எல்லாத்தையும் முடித்து விடலாம் என்று குற்றவை சொல்கிறார். ஆனால் பார்க்கவி, அப்பா போன விரக்தியில் இருப்பதால் இனி யார் மேல கம்ப்ளைன்ட் கொடுத்து என்ன பிரயோஜனம்.

எனக்கு துணையாக இருந்த என்னுடைய அப்பாவே என்னை விட்டுப் போய்விட்டார், இனி நானும் அவருடனே போய் விடுகிறேன் என்று பேச ஆரம்பித்து விடுகிறார். ஆனால் பார்க்கவியை சமாதானப்படுத்தி குணசேகரனுக்கு எதிராக கம்பளைண்ட் கொடுப்பதற்கு ஜனனி மற்றும் ஜீவானந்தமும் முயற்சி எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் கதிர் ஏற்கனவே செய்த அக்கிரமத்திற்கும் தற்போது வாத்தியார் உசுரு போனதற்கும் கதிர் மொத்தமாக ஜெயிலில் போய் களி திங்க போகிறார்.

இதோடு மட்டுமில்லாமல் குணசேகரனின் பரோலும் கேன்சல் ஆக போகிறது, அறிவுக்கரசியின் ஆட்டமும் அடங்கப் போகிறது. அத்துடன் இனி புகுந்த வீடும் இல்லை, கணவனும் இல்லை என்று நான்கு பெண்களும் துணிச்சலாக புருஷன்களை விட்டுவிட்டு தன்னந்தனியாக நின்னு சொந்தக்காலில் ஜெயித்து அவருடைய கனவை நிறைவேற்றும் விதமாக போராடப் போகிறார்கள்.